This Article is From Nov 15, 2018

தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் ரூ. 21 கோடி பறிமுதல்

மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது

தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் ரூ. 21 கோடி பறிமுதல்

கடந்த தேர்தலின்போது ரூ. 19 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Bhopal:

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் வரும் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வரைக்கும் ரூ. 21.63 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரூ. 51.29 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இவற்றில் ரூ. 7.44 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்கள், ரூ. 5.61 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ. 10.04 கோடி மதிப்புள்ள கள்ளச் சாரயம் உள்ளிட்டவை அடங்கும்.

தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு 1.31 லட்சம் பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவுகள் மத்திய பிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
 

.