বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 15, 2019

சபரிமலை விவகாரம்: சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடிய மோடி!

சிபிஎம் அரசு ஆன்மீகத்தையும், மதத்தையும் ஒருபோதும் மதித்தது இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அது மிகவும் வெட்கக்கேடான விஷயமாக மாறும் என்று யாரும் நினைத்ததில்லை, "என பிரதமர் மோடி கூறியுள்ளார்

Advertisement
இந்தியா
Kollam:

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, பல பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றனர். எனினும் அவர்கள் போராட்டகாரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால், இதில் 2 பெண்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக பலத்த போராட்டங்கள் நடைபெற்றன. இதுகுறித்து மாநில அரசு கூறும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது எங்களது கடமை என்று தெரிவித்தது.

கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு வலதுசாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதற்காக அவர்கள் வீதியில் இறங்கி கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், கேரளா மாநிலத்தில் தங்கள் ஆட்சியை நிறுவ முயலும் பாஜக தரப்பிலும் இந்த விவகாரத்திற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

Advertisement

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் விதமாக அந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணங்களை தொடங்கி உள்ளார். அந்தவகையில் இன்று அவர் கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து கேரளாவின் கொல்லத்தில் இரண்டு திட்டங்களை துவங்கி வைத்து உரையாற்றினர். அப்போது, சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் நடைபெறும் இடதுசாரிகள் அரசையும், எதிர்கட்சியான காங்கிரசையும் கடுமையாக சாடினார்.

 

சபரிமலை விவகாரத்தில், சிபிஎம் அரசின் நடவடிக்கை வரலாற்றில் எந்த அரசாங்கத்தின் மீதும் இல்லாத அவமானகரமான நடவடிக்கையாக இடம்பெறும். சிபிஎம் அரசு ஆன்மீகத்தையும், மதத்தையும் ஒருபோதும் மதித்தது இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அது மிகவும் வெட்கக்கேடான விஷயமாக மாறும் என்று யாரும் நினைத்ததில்லை, "என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement

இந்த விவகாரத்தில் கேரள பாஜக அரசு, வெளிப்படையாக தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பலத்த போராட்டத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement