Masood Azhar Ban: சீனாவின் எதிர்ப்பை மீறி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- புல்வாமா உள்ளிட்ட தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் மசூத் அசார்
- இந்தியாவின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது
- நட்பு நாடு என்பதால் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது
New Delhi: சீனாவின் எதிர்ப்பை மீறி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக(masood azhar global terrorist) ஐ.நா. அறிவித்துள்ளது. இது இந்தியாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவரும் ஒன்றிணைந்து முயன்றால் பெரிய இலக்குகளை அடையலாம். சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசார்(masood azhar ban) அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராக இருப்பவர் மசூத் அசார். இவர் இந்தியாவில், புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர். இவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் இந்த முயற்சிக்கு முட்டுக் கட்டை போட்டு வருகிறது. ஐ.நாவை பொறுத்தளவில் அதன் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முடியும்.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இந்தியாவின் முயற்சி தொடர் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து 4 முறை இந்தியாவின் முயற்சியை சீனா முறியடித்திருக்கிறது. பாகிஸ்தானின் நட்பு நாடு என்பதால் சீனா இந்த விவகாரத்தில் கூடுதல் அக்கறை காட்டுகிறது.
இந்த நிலையில் சீனாவின் எதிர்ப்பை மீறி சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை ஐ.நா. அறிவித்துள்ளது. இது இந்தியாவின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.