This Article is From May 10, 2019

அன்னையர் தினம் 2019: நீங்கள் கொடுக்க வேண்டிய தனித்துவமான பரிசு இதுதான்...!

Happy Mother's Day: உங்களின் வெற்றிக்கும், வேலைகளுக்கும் உங்கள் அம்மாவின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதை அழகான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துங்கள். உங்களுக்காக உங்கள் அம்மா செய்த தியாகங்களை நினைவு படுத்தி பாராட்டுங்கள். உங்களின் வாழ்வுக்கு அம்மா எப்படியொரு பொக்கிஷமாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துங்கள். 

அன்னையர் தினம் 2019: நீங்கள் கொடுக்க வேண்டிய தனித்துவமான  பரிசு இதுதான்...!

Mother's day 2019 quotes: உங்களின் அம்மாவிற்கு தனித்துவமான பரிசினைக் கொடுங்கள்

அன்னையர் தினம் வரவுள்ளது. உங்களின் வேலைப்பளுவுக்கு மத்தியில் நேரத்தை ஒதுக்கி உங்கள் அம்மா விரும்பக்கூடிய ஒன்றை பரிசை கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறிர்களா… வழக்கமான வாழ்த்து அட்டைகள், சாக்லேட், கேக், மலர்கள் என்று வழக்கமான பரிசுகளை தவிர்த்து விட்டு தனித்துவமான உங்களுக்கும் உங்கள் அம்மாவிற்கும் இடையே உள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் நீங்களே எழுதிக் கொடுங்கள். 

சிறிய பரிசாக இருந்தாலும் மிகச் சிறப்பான பரிசாக அதை உணர முடியும். உங்களின் வெற்றிக்கும், வேலைகளுக்கும் உங்கள் அம்மாவின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதை அழகான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துங்கள். உங்களுக்காக உங்கள் அம்மா செய்த தியாகங்களை நினைவு படுத்தி பாராட்டுங்கள். உங்களின் வாழ்வுக்கு அம்மா எப்படியொரு பொக்கிஷமாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துங்கள். 

இவற்றையெல்லாம் அழகாக நோட் புத்தகத்தில் எழுதி  பல வருடத்தின் புகைப்படங்களை இணைத்து பரிசளியுங்கள். உங்களின் அம்மாவின் அன்றாட பொறுப்புகளிலிருந்து விடுவித்து வார இறுதியில் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். 


 

.