ஒவ்வொரு மாதமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயின் நிபந்தனையற்ற அன்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் நாளாக இது உள்ளது. தாயின் பொறுமையும் வலி தாங்கும் திறன் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறது. அன்னையர் தினம் குறித்து மருத்துவர் மாதங்கி ராஜகோபாலனிடம் கருத்துகள்
முந்தைய காலங்களில், பிரசவத்தை மறுபிறப்பு என்று சொல்வதைப் பார்க்கலாம்.ஏனென்றால் பிரசவ காலத்தில் பெண்களின் இறப்பு அதிகமாக இருந்தது. இப்போது அப்படியில்லை தற்போது உள்ள மருத்துவமுறைகள் பிரசவகால இறப்பினை வெகுவாக குறைத்துள்ளது. ஆனால் இளம் வயது தாய்மார்கள், பெற்றோர்களின் அரவணைப்பில் இருந்த பெண்ணுக்கு திடீரென வரும் தாய்மை எனும் பெரும் பொறுப்பு உறக்கமில்லாத இரவுகளை பரிசளிக்கிறது. பாலூட்டும் கடமையும் உறக்கமில்லாத இரவுகளும் அனைத்து தாய்மார்களும் கடந்து வந்த தருணமாக இருக்கும். அனைத்து தாய்மார்களும் கடுமையான சூழல்களில் வெற்றி பெற்றவர்கள்.
இன்றைய காலங்களில் கர்ப்ப காலம் குறித்தும் அதில் வரும் சிரமங்கள் குறித்தும் பல இடங்களில் பேசப்படுகிறது. அனுபவங்களின் வழி கிடைத்தவற்றை பிறருக்கும் பகிர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.
தாய்மைக்காலத்தில் பெண்ணுக்கு உடல் அளவிலும் மனதளவிலும் ஏற்படும் மாற்றம் மிகப்பெரியது. கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் உடல் எடை பெண்ணுக்கு தன் உடல் குறித்த நம்பிகையை குறைக்கிறது.
குழந்தை பிறப்புக்குப் பின் முறையான உடற்பயிற்சி கூடுதல் எடை அதிகரிக்காமலும் தன் உடலின் வடிவமைப்பையும் பாதுக்காக்க முடியும், ஆரோக்கியமான உணவு முறையும் உடற்பயிற்சியும் பிரசவ காலத்தில் செய்வது மிகவும் அவசியம். இது குழந்தையின் நலனையும் தாயின் உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.
தன் பிள்ளைகள் எத்தனை தவறுகள் செய்தாலும் அதை அனைத்தையும் கடந்து தாயினால் தன் பிள்ளைகளை நேசிக்க முடியும். தேவைகளை பிள்ளைகள் உணரும் முன்பே அதை அறிந்து கவனித்துக் கொள்ள தாயினால் மட்டுமே முடியும். எதையும் எதிர்பார்க்க உழைப்புக்கு சொந்தக்காரர்கள் அன்னையர் மட்டுமே
தன் தாய்க்கு தன்னுடைய குழந்தைகள் சமுதாயத்தில் உன்னதமான நபர் ஆக வேண்டும். நேர்மையும் மற்றவர்களின் உழைப்பை மதிக்க கூடியவராக இருக்க வேண்டும் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். தாயின் உடலும் மனமும் தளரும் காலங்களில் அவர்களின் நலனை பாதுகாத்துக் கொள்வது மட்டுமே தாய்க்கு வேண்டியதாக இருக்கும். அன்னையர்களின் தியாகம் ஒரு நாள் மட்டும் பேசப்பட வேண்டியதில்லை. தாயின் தியாகம் அன்றாடம் பேசப்படக்கூடிய ஒன்று.