தண்ணீரில் நீந்திச் செல்வது போல் இருக்கும் இந்த வீடியோவை, ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்
கழுத்தளவு தண்ணீரில் டூவீலரில் செல்வதற்காக, வில்லேஜ் விஞ்ஞானிகள் சிலர் டுவீலரில் சிறிய மாற்றம் செய்து ஓட்டும் வீடியோ வைரலாகியுள்ளது.
பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே டூவீலரில் , கார்கள் ரிப்பேர் ஆகும். அதுவும் டுவீலர் மழை நீர் தேங்கிய இடத்தில் ஓட்டிச் சென்றால், அதன் சைலென்சருக்குள் மழை நீர் புகுந்து, வாகனம் பழுதாகி விடும்.
இப்படியான சூழலில் வில்லேஜ் விஞ்ஞானிகள் சிலர் கழுத்தளவு நீரில் டூவீலரை ஓட்டிச் செல்கின்றனர். இதற்கு அவர்கள் செய்த ஒரு அறிவார்ந்த செயல் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மழை நீர் சைலென்சருக்குள் புகாதவாறு, சைலென்சரின் புகைப்போக்கும் குழாயை சுமார் 8 அடிக்கு உயர்த்தியுள்ளனர். அதற்கு இணையாக தண்ணீர் பாட்டில் ஒன்றில் பெட்ரோலை நிரப்பி, அதையும் கம்பு ஒன்றில் கட்டி உயர்த்தி விட்டனர். இப்போது சைலென்சர், பெட்ரோல் குழாய் இரண்டிலும் தண்ணீர் புகாத வகையில் செய்து விட்டனர்.
பின்னர், கழுத்தளவு உள்ள நீரில், அதுவும் ஒரு வண்டியில் இருவர் பயணிக்கின்றனர். தண்ணீரில் நீந்திச் செல்வது போல் இருக்கும் இந்த வீடியோவை, ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனைப் பாராட்டிய அவர், இதுபோல் ஒரு வீடியோவைப் பார்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த உறுதியான விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் சமூகவலைதளங்களில் சிலர் இது அசாமில் எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டுள்ளனர்.
தண்ணீரில் டுவீலரில் பயணம் செய்யும் இளைஞர்களின் வீடியோ, சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் ரீடுவிட் செய்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
Click for more
trending news