This Article is From May 07, 2020

காற்று மாசு குறைவு: வீட்டு மாடியில் இருந்து தெரிந்த இமயமலை! வைரல் புகைப்படங்கள்!!

இந்த வைரல் புகைப்படத்தை, சிங்வாஹினி கிராம பஞ்சாயத் தலைவர் ரித்து ஜெய்ஸ்வால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காற்று மாசு குறைவு: வீட்டு மாடியில் இருந்து தெரிந்த இமயமலை! வைரல் புகைப்படங்கள்!!

வீட்டு மாடியில் இருந்து தெரிந்த இமயமலை! வைரல் புகைப்படங்கள்!!

ஹைலைட்ஸ்

  • வீட்டு மாடியில் இருந்து தெரிந்த இமயமலை! வைரல் புகைப்படங்கள்!!
  • பீகாரில் நேபாளாத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் தெரிகிறது
  • இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பார்த்தால், இமயமலையின் பனி மூடிய சிகரங்கள் தெரியும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிங்வாஹினி கிராமத்தில் வசிப்பவர்கள் காலையில் தூங்கி எழும் போது இந்த ஆச்சரியமூட்டும் காட்சிகளை கண்டு ரசித்துள்ளனர். 

இந்த வைரல் புகைப்படத்தை, சிங்வாஹினி கிராம பஞ்சாயத் தலைவர் ரித்து ஜெய்ஸ்வால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் இங்கிருந்தபடியே தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

தனது கிராமத்தில் இருந்தபடி, எவரெஸ்ட் சிகரத்தை தான் பார்ப்பது இதுவே முதல்முறை என்றும், நேபாளத்தின் மற்ற மலைகள் தெளிவான வானிலையின் போது தெரிவது என்பது சாதாரணமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிங்வாஹினி கிராமத்தில் வீட்டின் மாடியில் இருந்து பார்த்தால் எங்களால் எவரெஸ்ட் மலையை பார்க்க முடிகிறது என்றும், ”இயற்கை தன்னை சமநிலைப்படுத்திக்கொள்கிறது," என்று தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், காற்று மாசுபாட்டின் அளவு குறைந்ததன் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கீழே உள்ள அந்த படங்களை கானுங்கள்: 

தனது கிராமத்தில் தெரிவது எவரெஸ்ட் சிகரம் தான் என்பதை அவர் எப்படி உறுதியாக கூறுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்ப, அதறக் பதிலளித்த ஜெய்ஸ்வால், 80களில் தனது கணவர் சிறுவயதில் இந்த சிகரத்தை பார்த்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இந்த புகைப்படத்தை லைக்கும், ரீட்விட்டும் செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வானும் ரீட்விட் செய்துள்ளார்.

இதற்கு மற்ற ட்விட்டர் பயணாளர்களின் கருத்துகள்


இந்த புகைப்படம் குறித்து உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் பிரவில் பதிவிடுங்கள்.

Click for more trending news


.