This Article is From Oct 25, 2018

ம.பி தேர்தல் பிரசாரம்… மேஜிக் ஷோ நடத்த உள்ள பாஜக!

பாஜக, இதற்கு முன்னர் உத்தர பிரதேச தேர்தலின் போது, மேஜிக் ஷோக்களை நடத்தின.

ம.பி தேர்தல் பிரசாரம்… மேஜிக் ஷோ நடத்த உள்ள பாஜக!

நவம்பர் 28 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

Hyderabad:

ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல மேஜிக் வித்தகர் ஒருவரின் 20 மாணவர்களை, மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக பயன்படுத்த உள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 தேர்தல்களில் பாஜக வென்று ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து 4வது முறையாக ஆட்சி அரியணையில் நீடிக்க வேண்டும் என்ற நோக்கில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது அக்கட்சி.

இதன் ஒரு பகுதியாக மேஜிக் வித்தை மூலம் ஆட்சியின் போது செய்த திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து சொல்ல முனைந்துள்ளது பாஜக. இது குறித்து பாஜக-வின் செய்தி தொடர்பாளர் ராஜ்னீஷ் அகர்வால், '15 ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த சாதனைகளை மேஜிக் வித்தை மூலம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். 

மேலும் மேஜிக் ஷோ மூலம், 1993 முதல் 2003 வரை திக்விஜய் சிங்கிற்குக் கீழ் அமைந்த காங்கிரஸ் ஆட்சியின் குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த சமலா வேணு மேஜிக் குழுவுடன் இணைந்து தான் இந்தத் திட்டத்தை பாஜக செயல்படுத்த உள்ளது. இது குறித்து வேணு என்.டி.டி.வி-யிடம் கூறுகையில், ‘பாஜக தரப்பு, எதிர்கட்சி குறித்து என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்தும், தங்களைக் குறித்து என்ன தெரிவிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் எங்களுக்கு தெரியபடுத்தியுள்ளது. அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, அதை மக்களுக்கு பிடித்த வகையில் வெளிப்படுத்துவோம்' என்று கூறியுள்ளார். 

பாஜக, இதற்கு முன்னர் உத்தர பிரதேச தேர்தலின் போது, மேஜிக் ஷோக்களை நடத்தின. அப்போது, அது பல நேர்மறை விஷயங்களை கொடுத்ததால், மீண்டும் அந்த யுக்தியை பின்பற்ற உள்ளது பாஜக.

நவம்பர் 28 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்படும்.

.