இதுகுறித்த குறிப்பாணையை சமர்பிப்போம் என்று காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது.
Bhopal: மத்திய பிரதேசத்தில் ஆட்சி புரிந்து வரும் பாஜகவினர் பொது மக்கள் பணத்தை கொண்டு தேர்தல் பிரசாரத்தில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் நேற்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷோபா ஓசா செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத்தைச் சேர்ந்த ஐடி நிறுவனமான சில்வர் டச் டெக்னாலஜியுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போபாலில் அரசாங்க அலுவலகமான நர்மதா பவனில், இந்நிறுவனம் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த இடம் ஏற்கனவே மத்திய பிரதேசத்தின் மத்யாம் என்ற மாநில அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு துறைக்காக ஒதுக்கப்பட்ட இடம். இதற்கு ஆதாரமாக அந்த கட்டடத்தின் போன் பில் விவரத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் சமர்பித்துள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த ஐடி நிறுவனமான சில்வர் டச் டெக்னாலஜி, பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்லாது மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் குறித்தும் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. காங்கிரஸ் கட்சி குறித்து தவறான கருத்துக்களை பரப்புவதாகவும் ஓசா கூறினார்.
பாஜகவினர் தேர்தலில் வெற்றி பெற தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும், நர்மதா பவன் அலுவலகத்தில் 30 பாஜக உறுப்பினர்கள் இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருதாக கூறியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்த குறிப்பாணையை சமர்பித்து, அந்நிறுவனத்தின் அலுவலகம் உடனடியாக மூடப்படவேண்டுமென்று வலியுறுத்துவோம் என்று ஷோபா ஓசா கூறியுள்ளார்.
இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியாவிடம் கேட்ட போது, அவர் பதில் எதுவும் கூறவில்லை.