டிசம்பர் 11 ஆம் தேதி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Bhopal: மத்திய பிரதேசத்தில் இன்னும் ஒரே மாதத்தில் தேர்தல் வர உள்ளது. இந்நிலைநில் அங்கு களத்தில் இருக்கும் இரண்டு பிரதாக கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையில் பலத்தப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளுக்குமான பிரசாரத்தை, கட்சியின் இரண்டு முக்கிய முகங்களான ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியைப் பொறுத்த வரையில், மத்திய பிரதேச தேர்தலுக்காக தொடர்ந்து பல இந்து கோயில்களுக்கு விசிட் அடித்து வருகிறார். மாநிலத்தில் இருக்கும் பெரும்பான்மையினரான இந்துக்களை கவர இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. இதுவரை ராகுல், சித்ராகூட்டில் உள்ள கமாத்நாத் கோயிலிலும், டாத்தியாவில் உள்ள பிதம்பரா பீடத்திலும், ஜபல்பூரில் இருக்கும் நர்மதா ஆர்த்தியிலும் தரிசனம் செய்துள்ளார். வரும் அக்டோபர் 29-ல் ஆவர் இந்தூருக்கு சென்று, உஜ்ஜயினில் இருக்கும் மகாகாலேஷ்வர் கோயிலுக்கு தரிசனம் செய்த பிறகு அங்கு நடக்கும் பிரசராக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதையடுத்து தேவாஸில் சாலை வழிப் பிரசாரத்தில் ஈடுபட்டு மீண்டும் இந்தூரில் ஒரு சாலை வழிப் பிரசாரம் மேற்கொள்வார் என்று சொல்லப்பட்டுள்ளது.
அக்டோபர் 30-ல், ராகுல், அம்பேத்கர் பிறந்த இடமான டாக்டர்.அம்பேத்கர் நகருக்கு செல்வார். அதைத் தொடர்ந்து, விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமின் பிறப்பிடமான ஜனப்பாவிற்கு செல்வார். தலித்துகளை கவர அம்பேத்கர் நகருக்கும், பிராமணர்களை கவர ஜனப்பாவிற்கும் ராகுல் விசிட் அடிக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்தப் பயணங்களை முடித்துக் கொண்டு பழங்குடி மக்கள் இருக்கும் ஜபுவா, கார்கோன் ஆகிய இடங்களில் பேச உள்ளார். அங்கு அதிக அளவில் முஸ்லீம்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய பிரதசே பிரசாரப் பயணம் குறித்து இறுதி செய்யப்படவில்லை. ஆனால், அவர் நவம்பர் 5 ஆம் தேதிக்குப் பிறகு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 10 இடங்களில் அவர் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாஜக சற்று பலமற்று இருக்கும் இடங்களில் மோடி பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் நவம்பர் 28 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. டிசம்பர் 11 ஆம் தேதி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.