This Article is From Oct 25, 2019

தோனி தன் மகள் ஷிவாவுடன் காரை சுத்தம் செய்யும் வீடியோ

வீடியோ வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் 7 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் “தயவு செய்து எனக்கு உதவ வர முடியுமா” என்று கேட்டுள்ளனர்.

தோனி தன் மகள் ஷிவாவுடன் காரை சுத்தம் செய்யும் வீடியோ

தோனி பேண்டினை சுருட்டி வைத்து பெரிய கார் ஒன்றினை கழுவுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி தன் மகள் ஷிவாவுடன் காரை சுத்தம் செய்யும் காட்சி ஒன்றினை இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தந்தை மகள் இருவரும் தீபாவளிக்காக காரை சுத்தம் செய்கின்றனர். தோனி பேண்டினை சுருட்டி வைத்து பெரிய கார் ஒன்றினை கழுவுகிறார். உடன் ஷிவாவும் இருப்பதை பார்க்க முடிகிறது. தோனி “பெரிய வாகனத்தைக் கழுவ சிறிய உதவி எப்போதும் நீண்ட தூரம் செல்ல உதவும்” என்று எழுதி பதிவிட்டுள்ளார். 

கீழே அந்த வீடியோவைக் காணலாம்.

வீடியோ வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் 7 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் “தயவு செய்து எனக்கு உதவ வர முடியுமா” என்று கேட்டுள்ளனர். 

கார் பிரியரான தோனி நிசான் ஜோங்கா வாகனத்தில் சொந்த ஊரான ராஞ்சியை சுற்றி ஓட்டுவதைக் கண்டபோது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஜோங்கா இந்திய ராணுவத்தால் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனம். 

Click for more trending news

.