This Article is From Jun 27, 2018

சிறு, குறு தொழில் முனைவோருக்கான நாள்: சென்னையில் தமிழக அரசு நிகழ்ச்சி!

சிறு மற்றும் குறு தொழில் செய்வோரை ஊக்கப்படுத்தும் விதமாக ஐ.நா சபை சார்பில் ஜூன் 27 ஆம் தேதி சர்வதேச எம்.எஸ்.எம்.இ நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 ஆம் தேதி, தமிழக அரசு சார்பில் இந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் இருக்கும் ‘தி ரெய்ன்ட்ரீ’ ஓட்டலில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுனவத்தின் முதன்மை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

வெற்றி பெற்ற தொழில் முனைவோர்கள், மாணவ கண்டுபிடிப்பாளர்கள், தொழில் வளர்ச்சிக்கு துணை புரிவோர்கள் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவு கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.