This Article is From Oct 10, 2019

Viral Video: நேரடி ஒளிபரப்பில் நிருபர் அம்மாவை தேடி வந்த மகன்

நேரடி காட்சியின் போது, “மன்னிக்கவும், என்னுடைய மகன் இங்கே இருக்கிறான்” என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

Viral Video: நேரடி ஒளிபரப்பில் நிருபர் அம்மாவை தேடி வந்த மகன்

நிருபர் கோர்ட்னி குபே நேரடி ஒளிபரப்பில் பேசிக் கொண்டிருந்த போது அவரின் மகன் ரெயான் தன் அம்மாவின் கவனத்தைக் கவர இடையில் குறுக்கிட்டார்.

எம்.எஸ்.என்.பி.சி ஊடகத்தின்  தேசிய பாதுகாப்பு நிருபர் கோர்ட்னி குபே, நேரடி ஒளிபரப்பில் பேசிக் கொண்டிருந்த போது அவரின் மகன் ரெயான் தன் அம்மாவின் கவனத்தைக் கவர இடையில் குறுக்கிடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.  வடக்கு சிரியாவில் நடந்த துருக்கியின் வான்வழித் தாக்குதல்களைப் பற்றி அவர் விவாதித்துக் கொண்டிருந்தபோது, அவரது 4 வயது மகன் ரியான் அவருக்குப் பின்னால் பதுக்கிக் கொண்டு வந்து தாயை தொட்டு பேசத் தொடங்கி விட்டான். 

நேரடி காட்சியின் போது, “மன்னிக்கவும், என்னுடைய மகன் இங்கே இருக்கிறான்” என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார். 

இந்த வீடியோவை எம்.எஸ்.என்.பி.சி தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. வீடியோவை 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

“சில நேரங்களில் நீங்கள் பிரேக்கிங் செய்திகளை வழங்கும் போது எதிர்பாராத முக்கிய செய்திகள் நிகழ்கின்றன” என்று குறிப்பிட்டு #workingmoms என்று ஹேஷ் டேக்கையும் பயன்படுத்தியிருந்தது. 

இதேபோன்றதொரு நிகழ்வு பிபிசி ஊடகத்தின் நிருபர் ராபர்ட் கெல்லி நேர்காணலின் போது அவரின் குழந்தை குறுக்கிட்டது. இணையத்தில் அந்த வீடியோவும் வெகுவாக பகிரப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. 

கோர்ட்னி அதன்பின் பேசிய போது, “நான் மகனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டேன். ரெயான் மகிழ்ச்சியாகவே இருந்தான். மைக்கை தள்ளி விட்டு விடுவானோ என்று பயந்தேன்.” என்று கூறினார். 

Click for more trending news


.