ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை அன்று இரவிலிருந்து காணவில்லை. கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆன நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமயிடம், முகிலன் குறித்து கேள்வி எழுப்ப ப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், முகிலனின் குடும்பத்தினர் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டக்கூடாது என்று கூறினார்.
இந்நிலையில், முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : முகிலன் காணாமல் போன வழக்கு: போலீஸுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!