This Article is From Sep 09, 2019

Muharram 2019: நாளின் வரலாறையும் சிறப்பையும் தெரிந்துகொள்வோமா...?

Muharram 2019 India: முஹர்ரம் என்ற சொல்லுக்கு தடை செய்யப்பட்ட மற்றும் பாவத்திற்குரிய ஒன்று என்று பொருள்.

Muharram 2019: நாளின் வரலாறையும் சிறப்பையும் தெரிந்துகொள்வோமா...?

ஷியா முஸ்லீம்களுக்கு வருத்தமும் துக்கமும் நிறைந்த காலம் மசூதியில் துக்கரமான கவிதை பாராயாணங்கள் பாடப்படுகின்றன

NEW DELHI:

முஹர்ரம் பண்டிகை இஸ்லாமிய மதத்தில் ரமலானுக்கு அடுத்து மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. நான்கு புனித மாதங்களில் ஒன்றான முஹர்ரம்  உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் அனுசரிக்கப்படுகிறது. 

 முஹர்ரமின் வரலாறு: 

சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆஷூரா நாளில் நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் மற்றும் அவரின் சிறிய மகனும் கர்பலா போரில் கொல்லப்பட்டனர். இமாம் உசேன் கொல்லப்பட்டதையொட்டி கருணை மற்றும் நீதியை பற்றிய செய்தியாக அவரைப் பின்பற்றுபவர்களிடையே  கடைபிடிக்கப்படுகிறது.

முஹர்ரமின் முக்கியத்துவம்: 

முஹர்ரம் என்ற சொல்லுக்கு தடை செய்யப்பட்ட மற்றும் பாவத்திற்குரிய ஒன்று என்று பொருள். இந்த மாதத்தில் 10 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும். எல்லா முஸ்லீம் குழுக்களும் இந்த நாளை ஒரே மாதிரியாக கடைப்பிடிப்பதில்லை. ஷியா முஸ்லிம்கள் இந்த நாளில் துக்க நாளாக அனுசரிக்கிறார்கள். அது ஆஷூரா என்று அழைக்கப்படுகிறது. கி.பி 680இல் கர்பலா போரில் மாதத்தில் பத்தாம் நாளில் நபிகள் நாயகத்தின் பேரனும் ஷியா சமூகத்தின் மூன்றாம் இமாமுமான இமாம் உசேன் அலி கொல்லப்பட்டதாக நம்புகிறார்கள்.

முஹர்ரத்தை மக்கள் எவ்வாறு கடைபிடிக்கிறார்கள்?

ஆஷூரா நாளில் இமாம் உசேன் அலி ஷியா முஸ்லீம் சமூகம் துக்கம் அனுசரிக்கிறது. இமாம் உசேன் அலி தலை துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்பு அனுபவித்த துன்பங்களை இது எடுத்துக்காட்டுகிறது. முஹர்ரம் ஷியா முஸ்லீம்களுக்கு வருத்தமும் துக்கமும் நிறைந்த காலம் மசூதியில் துக்கரமான கவிதை பாராயாணங்கள் பாடப்படுகின்றன.

முஹர்ரம் மாதத்தில் சில மசூதிகள் மாதத்தின் சில இரவுகளில் அனைத்து மக்களுக்கும் இலவச உணவை வழங்குகின்றன.

சுன்னி முஸ்லீம்கள் தன்னார்வ நோன்பின் மூலம் அந்த நாளை நினைவு கூர்கின்றனர். ரம்ஜான் மாதத்தில் நோன்பு என்பது கட்டாயம். ஆனால் ஆஷூராவின் போது நோன்பு கட்டாயமில்லை.இந்த ஆண்டு ஆஷூராவின் நாள் செப்டம்பர் 10 செவ்வாய்கிழமை வருகிறது. 

.