ஹெம்லெஸ் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பொம்மை விற்பனையிலும் முன்னிலை வகிக்கும் திட்டத்தை ரிலையன்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.
MUMBAI: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிரிட்டிஷ் பொம்மைகள் சில்லறை விற்பனையாளாரன ஹெம்லெஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தி வருகிறது. தற்போது சில்லறை மற்றும் டெலிகாம் துறைகளின் வழியாக நுகர்வோர் பொருட்களுக்கான துறையிலும் தனி இடம் பதித்து வருகிறது.
ரிலையன்ஸ் என்ன விலை கொடுத்து வாங்கியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தவில்லை. 2015 சி பேனர் நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுகள் (130.2 மில்லியன் டாலர் ) கொடுத்து வாங்கியது. 250 ஆண்டுகால நிறுவனத்தை வாங்கி ரிலையன்ஸ் உலக அளவில் தனக்கான முத்திரையை பதிக்கத் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தர்ஷான் மேத்தா கூறுகையில், “உலகளாவிய சில்லறை விற்பனையை முன்னிட்டு இந்த நிறுவனத்தை வாங்கியுள்ளதாக” தெரிவித்தார்.
ஹெம்லெஸ் நிறுவனம் 1760 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற ஒன்று. பல நிறுவனங்கள் கைமாறி வந்துள்ளது. இந்தியாவின் 29 நகரங்களில் 88 கடைகள் உள்ளன. உலகமெங்கும் 167 கடைகள் 18 நாடுகளில் நடத்தி வருகிறது. ஹெம்லெஸ் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பொம்மை விற்பனையிலும் முன்னிலை வகிக்கும் திட்டத்தை ரிலையன்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.