Read in English हिंदी में पढ़ें
This Article is From Jul 13, 2019

ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடச் சொல்லி யாரும் யாரையும் வற்புறுத்தக்கூடாது - முக்தா அப்பாஸ் நக்வி

கும்பல் வன்முறையால் தாக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள போதுமானா சட்டம் உள்ளதென்று NDTVக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Written by
New Delhi:


சிறுபான்மையினர் அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி “ஜெய் ஸ்ரீராம்” என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும் ஒருவர் கும்பல் வன்முறையால் தாக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள போதுமானா சட்டம் உள்ளதென்று  NDTVக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

காவலர்கள் மற்றும் மருத்துவர்களால் கொல்லப்பட்ட 24 வயதான முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த தப்ரிஷ் அன்சாரி ‘ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடச் சொல்லி கம்பத்தில் கட்டி அடிக்கப்பட்டார். அந்த வழக்கின் ஜார்கண்ட் அரசாங்க அறிக்கையின் அடிப்படையில் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

கும்பல் வன்முறையால் தாக்கப்பட்ட சம்பவங்களில் ஒரு வழக்கில் கூட கைது செய்யப்படாமல் இல்லை. ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தில் பெயில் கிடைக்காமல் 6 மாதம் சிறையில் இருக்கிறார்கள். உத்திர பிரதேசத்தில் நடந்த சம்பவத்தில் 4 மணிநேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் எதுவாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று திரு நக்வி கூறினார்.

Advertisement

ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றார். 

சமீபத்திய சர்ச்சையான பாஜக எம்.எல்.ஏ அரசு அதிகாரிகளை தாக்கியது. பிரக்யா தகூர் நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று குறிப்பிட்டது போன்ற சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “பாஜக ஒரு ஒழுக்கமான கட்சி, கட்சியின் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சித்தால் கட்சி அவர்களுக்கு எதிராக செயல்படும் என்று கூறினார்.”

Advertisement
Advertisement