This Article is From Feb 14, 2019

‘’முலாயம் சிங்குக்கு நினைவாற்றல் மங்கி விட்டது’’ – லாலு மனைவி கொதிப்பு

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைப் பாராட்டி சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசினார். இதனை தலைவர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

‘’முலாயம் சிங்குக்கு நினைவாற்றல் மங்கி விட்டது’’ – லாலு மனைவி கொதிப்பு

முலாயம் சிங் பேசியதற்கு அர்த்தமே இல்லை என்று ராப்ரி தேவி கூறியுள்ளார்.

Patna:

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்குக்கு வயதாகி விட்டதால் நினைவாற்றல் மங்கி விட்டது என்று லாலுபிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி விமர்சித்துள்ளார். மோடியை முலாயம் பாராட்டிய நிலையில் அதற்கு பதிலடியாக ராப்ரி இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ‘'நான் மோடியை பாராட்ட விரும்புகிறேன். ஒற்றை ஆளாக அவர் எல்லாவற்றையும் செய்து முடித்து வருகிறார். இங்கிருக்கும் அனைத்து உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் இங்கு வருவார்கள் என்று நம்புகிறேன். பிரதமர் மோடியும் அவ்வாறு மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்'' என்று பேசினார்.

சமாஜ்வாதியும், பாஜகவும் எதிரிக்கட்சிகளாக இருந்து வரும் நிலையில் முலாயம் சிங் தன்னிலை உணர்ந்து பேசுகிறாரா என்று பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவின் மனைவி முலாயமை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது-

முலாயம் சிங்குக்கு வயதாகி விட்டது. எனவே அவரது நினைவாற்றல் மங்கி விட்டது. அவருக்கு என்ன பேச வேண்டும் எங்கு பேச வேண்டும் என்பதே தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் அவர் பேசியதற்கு எந்த அர்த்தமும் கிடையாது.

இவ்வாறு ராப்ரி தேவி கூறியுள்ளார்.

.