மெய்ன்புரி தொகுதியில் போட்டியிடுகிறார் முலாயம் சிங் யாதவ்
ஹைலைட்ஸ்
- 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி வெளியிட்டுள்ளது
- முலாயம் சிங் மெய்ன்புரியில் போட்டியிடுகிறார்
- உ.பி.யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளன.
New Delhi: மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் முலாயம் சிங் யாதவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் மெய்ன்புரி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
கடந்த 2014 தேர்தலின்போது முலாயம் சிங் யாதவ் மெய்ன்புரி மற்றும் ஆசம்கர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். பின்னர் மெய்ன்புரி தொகுதியை அவர் விட்டுக் கொடுத்தார். மெய்ன்புரி தொகுதி தேஜ் பிரதாப் சிங் வசம் உள்ளது. இவரும் முலாயம் சிங் குடும்பத்தை சேர்ந்தவர்.
நீண்ட நாட்களாக எதிரிக்கட்சியாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியுடன் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி வைத்துள்ளது. இந்ததேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இரு கட்சிகளும் கூட்டணி வைக்கவில்லை.
நாட்டில் ஆட்சியை தீர்மானிக்கும் மாநிலங்களில் மிக முக்கியமான மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. இங்குள்ள 80 தொகுதிகள் நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றன.
முலாயம் சிங்கை பொறுத்தவரையில் அவருக்கு மெய்ன்புரி தொகுதி என்பது மிகவும் பாதுகாப்பான தொகுதியாக கருதப்படுகிறது. அவர் கடந்த 1996, 2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
கடந்த 2014-ல் ஆசம்கர் தொகுதியை தேர்வு செய்த முலாயம் சிங் யாதவ் அங்கு 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.