துப்பிக்கிச்சூடு நடத்தியது யார் என்றும் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே இரவு சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் தொலைக்காட்சி நிலையமான பாக்ஸ்-5 அளித்த தகவலின் படி, இரவு 10 மணி அளவில் சாலையில் நடந்துச் சென்ற 6 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
எனினும், காயமடைந்தவர்கள் நிலைகுறித்த தகவல்கள் ராய்ட்டர்ஸூக்கு கிடைக்கவில்லை. உடனடியாக போலீசாரையும், தீயணைப்பு படையினரையும் தொடர்பு கொண்டு நிலையை தெரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எபிசியுடன் தொடர்புடைய, WJLA-தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பதிவில், வெள்ளை மாளிகையில் இருந்து 3 கி.மீக்கு அருகாமையில் உள்ள கொலும்பியா சாலை 14வது தெருவில், நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அங்கு அதிகளவிலான போலீசார் குவிந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும், காயமடைந்தவர்களை ஆம்புலான்சில் தூக்கிச் செல்வது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)