This Article is From Oct 26, 2019

பெருமூளை முடக்குவாத சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றிய தாய் -நெகிழவைக்கும் வீடியோ

இந்த வீடியோவை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு ட்வீட் செய்யப்பட்ட பின்னர் 18.5 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

பெருமூளை முடக்குவாத சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றிய தாய் -நெகிழவைக்கும் வீடியோ

பெருமூளை முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் முதன் முதலாக ஸ்கேட்டிங் செய்கிறான்

மனதை நெகிழச் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. மூளை முடக்குவாத சிறுவனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் அவரது தாய். ஜோவா விசெண்ட் மூளை முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன். அவனுக்கு ஸ்கேட்டிங் செய்ய வேண்டுமென்ற ஆசையிருந்தது. இதற்காக அவருடைய தாய் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஸ்கேட்டிங் போர்ட் கட்டமைப்பு உருவாக்கியுள்ளார். 

அந்த வீடியோவில் பிரேசிலில் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஸ்கேட் பூங்காவில் மகன் விரும்பிய ஸ்கேட்டிங் விளையாட்டை நிகழ்த்திக் காட்டுகிறார். சிறுவனின் முகத்தில் மலரும் புன்னகை அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியை உருவாக்குகிறது.
 
இந்த வீடியோவை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு ட்வீட் செய்யப்பட்ட பின்னர் 18.5 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

சிறுவன் ஒரு வயது எட்டு மாதத்திலேயே பெருமூளை முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான்.நிற்க கூட முடியாத சிறுவனின் ஆசையை தாய் நிறைவேற்றிக் காட்டியுள்ளார். சிறுவனுக்கு ஏற்ற வகையில் ஸ்கேட்டிங் போர்ட்டை கட்டமைத்தார். 

தாயார் இந்த வீடியோவை “இந்த உலகை வெல்ல தகுதியானவன்”என்று எழுதி பகிர்ந்துள்ளார். 

Click for more trending news

.