Sources also revealed that Kamaljit Singh may have targeted over 15 policemen's homes
ஹைலைட்ஸ்
- காவலர்களின் வீடுகள் மட்டுமே கமல்ஜித்தின் இலக்கு
- காவலர் வீட்டுக்குள் நுழைய முற்படும் போது பிடிபட்டார்
- போலீஸ் வீட்டில் கண்காணிப்பு இருக்காது என்பது திருடனின் மாஸ்டர் பிளான்
Mumbai:
போலீஸாரின் வீடுகளுக்குள் புகுந்து கொல்லையடித்து வந்த 20 வயது இளைஞர் ஒரு வழியாக போலீஸிடம் சிக்கினார். போலீஸாரின் வீட்டில் திருடுவதை ஒரு மன நிலையாகவே வைத்திருந்திருக்கிறார் கமல்ஜித் சிங் என்கிற அந்த இளைஞர். கடந்த வாரம் காவலர் குடியிருப்பு ஒன்றில் பூட்டை உடைத்து திருட முயன்ற போது, அவரை போலீஸார் கைது செய்தனர்.
இது பற்றி காலாசோக்கி காவல் ஆய்வாளர் கூறுகையில், “ கடந்த புதன்கிழமை அன்று கமல்ஜித் இரண்டு கான்ஸ்டேபிள்களின் வீட்டுக்குள் பூட்டை உடைத்து கொல்லையடித்திருக்கிறான். முதல் காவலர் வீட்டில் 60 கிராம் தங்கத்தையும், 2800 ரூபாய் பணாத்தையும் திருடிய பின், மற்றொரு காவல் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறான். அங்கு எதுவும் இல்லாததால், வெளியேறிவிட்டான்.” என்றார்.
மேலும், ஒரு காவலர் வீட்டின் பூட்டை உடைக்க முயல்கையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அந்த குடியிருப்பில இருந்த யஷ்வந்த் என்ற காவலருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். மேலும் இரு காவலர்களும் அவருடன் தேடுதலில் ஈடுபட்டனர். ஒரு வழியாக காட்டன் கிரீன் ரயில் நிலையம் அருகே கமல்ஜித்தை மடக்கிப் பிடித்து வடாலா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வடாலா காவல் ஆய்வாளர் கூறுகையில், “ கமல்ஜித் மீது மேலும் இரண்டு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், சிறு வயதிலேயே இந்த செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்” என்றும் கூறுகிறார்.
கமல்ஜித் காவல் துறையினரின் வீடுகளை இலக்காக வைப்பதன் காரணம், போலீஸாரின் குடியிருப்பில் எந்த பாதுகாப்பு கண்காணிப்பும் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 15 காவல் அதிகாரிகளின் வீட்டில் கமல்ஜித் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரது சகோதரி போதை பொருள் விற்பவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பைக்குல்லா காவல் ஆய்வாளர் கூறுகையில், 2017-ம் ஆண்டு கான்ஸ்டேபிள் ஒருவர் வீட்டில் இருந்து பிஸ்டலையும், 30 புல்லட்களையும் களவாடியதாக கைதாகி பின், ஜாமினில் வெளியாகினார் கமல்ஜித். அதற்கு பின் இதுவரை 6 வீடுகளுக்கு புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)