ரூ.1.15 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன.
Mumbai: நகைக்கடை ஊழியர் மீது மிளகாய்ப்பொடி தூவி ரூ.1.33 கோடி மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்த நான்கு பேரை மும்பை குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அக்.20 ஆம் தேதி மும்பையின் என்.எம் ஷோசி சாலையில் உள்ல மதுரதாஸ் மில் வளாகத்தில் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் தங்க மற்றும் வைர நகைகளை தயாரித்து விற்கப்படும் இடத்திலிருந்து நகைகளை வாங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கையில் கத்தியுடன் வந்த நான்கு பேர், ஊழியர் மீது மிளகாய்ப்பொடியை தூவி ரூ1.33 கோடி மதிப்புள்ள நகைகளை பறித்து சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
என்.எம் ஷோஷி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் அருகில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் தாங்கள் கொள்ளையடிக்கும் காட்சி பதிவாகி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளனர். இருப்பினும், சந்தேகத்தின் பெயரில் நகைக் கடை நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுரேஷ் டோக்(36) என்பவரிடம் விசாரணையை தொடங்கியதாக குற்ற தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுரேஷ் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டுள்ளார், பின் மூன்று பேரி உதவியுடன் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதலில் கைது செய்யப்பட்ட சுரேஷ் கொடுத்த தகவலின் பேரில் மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். ரூ1.15 கோடி மதிப்பிலான நகைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் நான்கு பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது, நவம்.19 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு தீர்ப்பு அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.