Read in English
This Article is From Nov 01, 2018

கோலியின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் செய்த பிரமாண்ட சமர்ப்பணம்!

இந்த மோசேய்க் ஒவியம் தற்போது மக்களின் பார்வைக்காக, நவி மும்பையில் உள்ள சீவுட் கிராண்ட் சென்ட்ரல் மாலில் வைக்கபட்டுள்ளது

Advertisement
விசித்திரம்

மும்பையைச் சேர்ந்த கலைஞரான அபாஸாஹேப் ஷீவாலே, தனக்கு மிகவும் பிடித்த நட்சத்திர வீரரான விராட் கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சமர்ப்பிக்கும் விதமாக, பிரமாண்ட மண்விளக்காலான மோசேய்க் உருவத்தை செய்துள்ளார்.

இந்த மோசேய்க் ஒவியம் தற்போது மக்களின் பார்வைக்காக, நவி மும்பையில் உள்ள சீவுட் கிராண்ட் சென்ட்ரல் மாலில் வைக்கபட்டுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்ஙளே உள்ள நிலையில், 4,482 மண்விளக்குகள் வைத்து 9.5 அடி அங்குலம் 14 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்டமான மோசேய்க் உருவத்தை உருவாக்கியுள்ளார்.

 

இது தான் உலகின் மிகப்பெரிய மோசேய்க் படம் என்றும், இதுகுறித்து கின்னஸ் சாதனைக் குழுவினருக்கும் , உலக சாதனை குழுவினருக்கும் தெரிவித்துள்ளேன் என்றும் ஷீவாலே என்.டி.டீ.வியிடம் கூறினார்.

 
 
 

இந்த வித்தியாசமான கலையை செய்ய 5 சக கலைஞர்களான சினேஹி ஷீவாலே, தனுஜா ஷீவாலே, சுரஜ் கோல், குமார் ஹாதுவாலே மற்றும் ரூபேஷ் தன்டெல் ஆகியோர் உதவியுள்ளனர்.

தீபாவளி வருவதால் இதை சிகப்பு, வெள்ளை, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் மரூன் போன்ற வண்ணங்களை கொண்டு 8 மணி நேரத்தில் இந்த படம் முடிக்கபட்டுள்ளது.

Advertisement

இணைய தளங்களில் அதிகம் பகிரப்பட்ட இந்தப் படம், பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Advertisement