முன்னெச்சரிக்கையாக மக்களை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கையை அரசு இப்போதே தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
New York: புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை முழுவதுமாக கடலில் மூழ்கி விடும் என்று சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை சேர்ந்த பருவநிலை மையம் (Climate Central) என்ற அமைப்பு பருவநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அமெரிக்க இதழான Nature Communicatios -ல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
புவி வெப்பமயமாதல் காரணமாக இனிவரும் நாட்களில் கடல் மட்டம் உயரக்கூடும். இதன்படி, 2050-ம் ஆண்டுக்குள் மும்பையில் 15 கோடிப்பேர் வசிக்கும் இடம் கடலில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே, மும்பையில் கடல் பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை இப்போதே தொடங்க வேண்டும். கடல் மட்டம் உயர்வது குறித்து நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம். எங்களுக்கு தெரியும் இவ்வாறு நடப்பது நிச்சயம் என்று.
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையின் பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.