Read in English
This Article is From Jul 25, 2018

மும்பையில் மராத்திய அமைப்புகளின் பந்த் முடிவுக்கு வந்தது!

மக்கள் அமைதி காக்க வேண்டும். இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது, முதல்வர்

Advertisement
இந்தியா
Mumbai:

மகாராஷ்டிராவில் இருக்கும் மராத்திய அமைப்புகள், தங்களுக்கு அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மும்பையில் முழு அடைப்பு பந்துக்கு மராத்திய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பந்த் அழைப்பை அடுத்து, பல தனியார் பஸ் நிறுவனங்கள், இன்று அவர்களின் வாகனத்தை இயக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அவுரங்காபாத்தின் கிராமப்புற பகுதிகளில் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டது. அதே நேரத்தில், மும்பையில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ‘மக்கள் அமைதி காக்க வேண்டும். இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.

தெரிந்துகொள்ள வேண்டிய 10 ஃபேக்ட்ஸ்:

மராத்தா கிராந்தி மோர்சா என்ற அமைப்புதான் இந்தப் போராட்டங்களை முன்னின்று எடுத்துச் செல்கின்றன. அந்த அமைப்புதான் இன்று மும்பையில் முழு அடைப்பு பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்னொரு அமைப்பான சாகல் மராத்தா சமாஜ், நவி மும்பையில் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நவி மும்பையில் இன்று காலை இரண்டு பேருந்துகள் மீது கல்லெறியப்பட்டது. அங்கு கடைகள் மூடப்பட்டுள்ளன.

Advertisement

கிழக்கு எக்ஸ்பிரஸ்வே சாலையை போராட்டக்காரர்கள் முடக்கியுள்ளனர்.

மத்திய மகாராஷ்டிராவில் தான் இந்த பந்த் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நேற்று வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவம் நடந்ததை அடுத்து, போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த மோதலில் ஒரு போலீஸ் இறந்தார். 9 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

காகாசாகப் ஷிண்டே என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று கோதாவரி நதியில் குதித்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அருகில் இருந்தவர்கள். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டார். அவரின் இறப்புதான் போராட்டத்தை வீரியமடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் சந்திரகாந்த் கைரே நேற்று அவுரங்காபாத்தில் நடந்த ஷிண்டேவின் இறுதி ஊர்வலத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நேற்று அவுரங்காபாத்தில் இன்னொரு நபர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Advertisement

அவுரங்காபாத்தில் தீயணைப்பு வண்டிக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். ஓஸ்மானாபாத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்கு முன்னர் வாகனத்தின் டயர்கள் கொளுத்தப்பட்டது. பர்பானி மாவட்டத்தில் ரயில்கள் மறியல் செய்து தடுக்கப்பட்டன. 

பந்தராப்பூர் டவனில் இருக்கும் கோயிலுக்கு முதல்வர் ஃபட்னாவிஸ் செல்ல இருந்தார். ஆனால் இதை முதல்வர் ரத்து செய்து, ‘மராத்திய அமைப்பைச் சேர்ந்த சிலர் என்னைத் தாக்க திட்டமிட்டுள்ளனர்’ என்று கூறினார். இதற்கு மராத்தா கிராந்தி மோர்சா அமைப்பு, ‘இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் எங்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளது.

Advertisement

மகாராஷ்டிராவில் 30 சதவிகிதம் பேர் மராத்தியர்கள் தான். அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement