Read in English
This Article is From Jun 03, 2020

புயல் கரையை கடக்கும் நேரத்தில் செய்ய வேண்டியவை எவை? வழிகாட்டுதல்களை வழங்கிய மகாராஷ்டிரா அரசு!

இந்நிலையில் புயல் கரையை கடக்கும் காலகட்டங்களில் செய்ய வேண்டியவை எவை மற்றும் செய்யக்கூடாதவை எவை என்பது குறித்த அறிவிப்புகளை முப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Advertisement
இந்தியா
Mumbai/ New Delhi:

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு நிசர்கா என்ற புயல் மும்பையை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மகாராஷ்டிரா   - குஜராத் இடையே நிசர்கா  புயல் கரையை கடக்கும் சமயத்தில், மும்பையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 110 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள அலிபக் என்கிற பகுதியில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 41 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கொரோனா தொற்று நோயாளிகளை கொண்ட மும்பை நகரமும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களும் எச்சரிக்கையுடன் உள்ளன.

இந்நிலையில் புயல் கரையை கடக்கும் காலகட்டங்களில் செய்ய வேண்டியவை எவை மற்றும் செய்யக்கூடாதவை எவை என்பது குறித்த அறிவிப்புகளை முப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

செய்ய வேண்டியவை:

  • வீடுகளுக்கு வெளியே உள்ள எடை குறைவான பொருட்களை காற்றில் பறக்காதவாறு இறுக்கி கட்டி வைக்க வேண்டும். அல்லது, வீட்டிற்குள் பாதுகாப்பான இடங்களில் எடை குறைவான பொருட்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • முக்கிய ஆவணங்கள் மற்றும் நகைகளை பிலாஸ்டிக் பைகளில் போட்டு பத்திரமான இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பேட்டரி மூலமாக மின்சாரம் பெரும் வசதி வைத்திருப்பின் அதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
  • அரசு அறிவுறுத்தும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • அவசர காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பயிற்சி செய்யுங்கள்
  • கான்கிரீட் வீடுகளில் வசிப்பவர்கள் சூறாவளியின் போது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
  • அவசர உதவிக்கான மருந்துகளை தயாராக வைத்திருங்கள்.
  • சன்னல்களை விட்டு விலகியிருங்கள். பல சன்னல்களை மூடியும், சில சன்னல்களை அழுத்தத்தினை குறைப்பதற்காக திறந்தும் வைத்திருங்கள்.
  • அறையின் மையப்பகுதியில் இருக்கவும். ஓரங்களிலோ அல்லது சிதிலமடைந்த பகுதிகளிலோ இருப்பதை தவிர்க்கவும்.
  • வலுவான மரப்பலகைகளின் கீழே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கைகளை பயன்படுத்தி தலை மற்றும் கழுத்தினை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
  • அதே போல பெரிய கூரையின் கீழ் இருப்பதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • அரசு ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பான முகாம்களுக்கு இடப்பெயரவும்.
  • அவசரமில்லாத அனைத்து மின் உபயோகப்பொருட்களையும் மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவும்.
  • சுத்தமான இடங்களில் குடிநீரை சேமித்து வைக்கவும்.
  • இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதல் உதவி சிக்சையளிக்கவும்.
  • எரிபொருள் சிலிண்டர்களிலிருந்து எரிபொருள் கசிவதை உணர்ந்தால் உடனடியாக அனைத்து சன்னல்களையும் திறந்து வைக்கவும், கட்டிடங்களிலிருந்து உடனடியாக வெளியேறவும், வாய்ப்பு இருப்பின் சிலிண்டர் வால்வை அணைத்துவிட்டு சம்பந்தப்பட்ட எரிபொருள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
  • மின் இணைப்புகளில் கசிவு மற்றும் எரியும் வாடையை உணர நேர்ந்தால் உடனடியாக மெயின் இணைப்பினை துண்டிக்கவும்.
  • அருகில் உள்ள மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு உதவுங்கள்.
     

செய்யக்கூடாதவை:
 

  • வதந்திகளை நம்பவோ பரப்பவோ செய்யாதீர்கள்.
  • புயல் கரையை கடக்கும் நேரத்தில் பயணம் செய்வதையோ, வாகனம் ஓட்டுவதையோ முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.
  • பாழடைந்த அல்லது சிதிலமடைந்த கட்டிடங்களை விட்டு விலகி இருங்கள்.
  • எரியும் தன்மை கொண்ட எண்ணெய் எரிபொருட்கள் மற்றும் இதர எண்ணெய் பொருட்கள் தரையில் கொட்டியிருப்பின் உடனடியாக சுத்தம் செய்யுங்கள்.
Advertisement