ஆன்லைன் மோசடியில் ரூ.32 லட்சத்தை இழந்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர்!. (Representational)
Mumbai: மும்பையில் புறநகர் கண்டிவாலியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் மோசடியில் ரூ.32 லட்சத்துக்கு மேல் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான போலீசார் ஒருவர் கூறும்போது, புகாரின் படி, அந்த தொழிலதிபருக்கு கானாவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து ஜூன் மாதம் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், இந்தியாவில் மட்டுமே கிடைக்கூடிய ஆர்கானிக் கெமிக்கல் திரவம் ஒன்றை உங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த தொழிலதிபர் அந்த மின்னஞ்சல் அனுப்பியவரை தொடர்பு கொண்டு விரிவாக விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். தொடர்ந்து, அந்த நிறுவனத்திடமிருந்து, அவருக்கு மாதிரிகளும் அனுப்பப்பட்டுள்ளன. இதன் விளைவாக 10 கேலான் திரவத்தை அவர் கொள்முதல் செய்துகொள்வதாக ஆர்டர் வழங்கியுள்ளார். எனினும், அதற்கு எந்த முன்பணமும் அவர் செலுத்தவில்லை.
இதன்பின்னர் அந்நிறுத்தின் தரப்பில் இருந்து அந்த தொழிலதிபரை தொடர்புகொண்டு ரூ.15 லட்சத்தை முன்பணமாக செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அதன்பின்னர் ஒரு மாத கால இடைவெளியில் மேலும் பணம் செலுத்தும் படி தெரிவித்துள்ளது.
இப்படியே ரூ.32.64 லட்சம் வரை அந்த தொழிலதிபர் செலுத்திய நிலையில், அவருக்கு எந்தவொரு பொருளும் அனுப்பி வைக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இதன் பின்னர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆன்லைன் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.