This Article is From May 16, 2019

தொழிலதிபர் கொடுத்த பார்ட்டி: சோதனையில் கைதான முக்கிய அரசு அதிகாரிகள்

ஒரு தொழிலதிபர் அரசாங்க அதிகாரிகளுக்கும் மற்றும் சில பணக்காரர்களுக்கும் பிரத்யேகமாக நடத்திய பார்ட்டி என்றும் தெரிய வந்துள்ளது.

தொழிலதிபர் கொடுத்த பார்ட்டி: சோதனையில் கைதான முக்கிய அரசு அதிகாரிகள்

குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டு பெயிலில் வெளியாகியுள்ளனர்.. (Representational)

Mumbai:

மும்பையில் டான்ஸ் பாரில் நடந்த சோதனையில் மும்பை நகராட்சி அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. 

தெற்கு மும்பையில் கோலபா என்ற இடத்தில் உள்ள டான்ஸ் பாரில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அதில்ல் 9 பேர் ஹோட்டல் பணியாளர்கள் 6 பேர் மும்பை கார்ப்ரேஷனில் பணிப்புரியும் மூத்த அதிகாரிகள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தொழிலதிபர் அரசாங்க அதிகாரிகளுக்கும் மற்றும் சில பணக்காரர்களுக்கும்  பிரத்யேகமாக நடத்திய பார்ட்டி என்றும் தெரிய வந்துள்ளது. சில பெண் ஊழியர்களும் பார்ட்டியில் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டு பெயிலில் வெளியாகியுள்ளனர்.

.