This Article is From May 31, 2019

‘மும்பை டூ அமெரிக்கா..’- இப்படியொரு டான்ஸ் பார்த்திருக்கீங்க..? #ViralVideo

நிகழ்ச்சியில் மும்பையில் இருந்து ‘வி.அன்பீட்டபுள்’ (V.Unbeatable) என்கிற நடனக் குழு கலந்து கொண்டு மெர்சல் காட்டியுள்ளது. 

‘மும்பை டூ அமெரிக்கா..’- இப்படியொரு டான்ஸ் பார்த்திருக்கீங்க..? #ViralVideo

பாலிவுட்டில் வெளியான ‘பஜ்ரவ் மஸ்தானி’ திரைப்படத்தில் வரும் பாடலுக்கு ‘வி.அன்பீட்டபுள்’ குழுவினர் தெறிக்கவிடும் குழு நடனத்தை அரங்கேற்றினார்கள். 

‘அமெரிக்காஸ் காட் டேலன்ட்' என்கிற அமெரிக்க டிவி ஷோ, உலக அளவில் மிகவும் பிரபலமானது. அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது எதிர்பாராதவகையில் சிலர், தங்களின் திறமையை வெளிப்படுத்தி பலரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குவார்கள். அந்த நிகழ்ச்சியில் மும்பையில் இருந்து ‘வி.அன்பீட்டபுள்' (V.Unbeatable) என்கிற நடனக் குழு கலந்து கொண்டு மெர்சல் காட்டியுள்ளது. 

அவர்களின் குழு நடனத்தைப் பார்த்து நிகழ்ச்சியை நேரில் கண்ட ரசிகர்கள் மட்டுமல்ல, நடுவர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என எல்லோரும் மெய் சிலிர்ந்து கரகோஷம் எழுப்பினர். 

பாலிவுட்டில் வெளியான ‘பஜ்ரவ் மஸ்தானி' திரைப்படத்தில் வரும் பாடலுக்கு ‘வி.அன்பீட்டபுள்' குழுவினர் தெறிக்கவிடும் குழு நடனத்தை அரங்கேற்றினார்கள். 

அவர்களின் நடனத்தை ‘அமெரிக்காஸ் காட் டேலன்ட்' நிகழ்ச்சிக் குழுவினர் தங்களது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோ உலக அளவில் வைரலாக பரவி வருகின்றது. 

வி.அன்பீட்டபுள் குழவில் 28 பேர் உள்ளனர். குழுவில் இருப்பவர்களுக்கு 12 முதல் 27 வயது வரை இருக்கிறது. 

தங்களின் நடனத்தை அரங்கேற்றுவதற்கு முன்னர், வி.அன்பீட்டபுளிடம், “மும்பையில் இருப்பது எப்படி இருக்கிறது?” என்று கேட்கப்பட்டது. 

அதற்கு, “மும்பையில் இருப்பது மிகவும் கடினமானது. குறிப்பாக குடிசைப் பகுதியில் வாழ்வது சிரமம்.

குடிசைப் பகுதி மிகவும் நெருக்கமானதாக இருக்கும். மிகவும் அசுத்தமாகவும் இருக்கும். சரியான வகையில் மின்சாரம் கூட கிடைக்காது. ஒரே அறையில் 7 முதல் 10 பேர் வசிப்போம். அங்கு வாழ்வதே மிகப் பெரிய சவால்தான்.

ஒவ்வொரு நாளும் நல்ல வாழ்க்கைக்காக நாங்கள் பிரார்த்திப்போம். எங்களுக்கு வாய்ப்புகள் அமைவதும் கஷ்டம்தான்.

இந்த நகிழ்ச்சியை நாங்கள் யூ-டியூபில் பார்த்திருக்கிறோம். இதில் கலந்து கொள்ள முடியுமா என்றெல்லாம் நாங்கள் கனவு கண்டிருக்கிறோம். இன்று இங்கு வந்துள்ளதால் கனவு நனவாகியுள்ளது. வி.அன்பீட்டபுள்ஸ் என்றால் யார் என்பதை உலகிற்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறோம்” என்று கூறினர். 

Click for more trending news


.