This Article is From May 27, 2019

சீனியர்களால் சாதிக்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவர் தற்கொலை!

இதுகுறித்து நிர்வாக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உயிரிழந்த மருத்துவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

சீனியர்களால் சாதிக்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவர் தற்கொலை!

மும்பை மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் பாயல் சல்மான் தட்வி 23,

ஹைலைட்ஸ்

  • மே.22ஆம் தேதி நாயர் மருத்துவமனையில் பாயல் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்
  • மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாயலின் தாயார் த
  • குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 மருத்துவர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
New Delhi:

மும்பையில் சீனியர்களால் சாதிக்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் அம்மாநிலத்தால் நடத்தப்பட்டு வரும் மருத்துவமனையில் தங்கி, பாயல் சல்மான் தட்வி 23, என்ற பெண் மருத்துவர், பெண்கள் நல மருத்துவம் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதியன்று பாயல் அவரது அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாயலின் தாயார் கூறும்போது, பாயலை அவரது சீனியர்கள் தொடர்ச்சியாக சாதியைக் கூறி அவமானப்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், மருத்துவர் பாயலை தொடர்ச்சியாக சாதிக்கொடுமைக்கு உட்படுத்தி அவர் தற்கொலை செய்ய காரணமான 3 சீனியர் மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதனிடையே, மகாராஷ்டிரா மருத்துவர்கள் அசோசியேஷன், குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமா ஆகுஜா, பாக்டி மேகார் மற்றும் அங்கிதா காண்டில்வால் ஆகிய மூன்று மருத்துவர்களின் உறுப்பினர் உரிமையையும் ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி தீபக் குந்தால் கூறும்போது, முதல்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கு எதிராக, தலித்துகள் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிணையில் வெளிவரமுடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தாத்வியின் தாயார் கூறும்போது, மூத்த மருத்துவர்களின் சாதிக்கொடுமை குறித்து நிர்வாக தரப்பில் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிர்வாக தரப்பை குற்றம்சாட்டிய அவர், எங்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தவர்கள், ஆனால் அதனை மேற்கொள்ள தவறிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். 

தாத்வி எப்போது என்னிடம் தொலைபேசியில் பேசினாலும், அந்த 3 மூத்த மருத்துவர்களும் தான் பழங்குடியினத்தை சேர்ந்தவள் என்பதால் தன் மீது சாதியக்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதாக கூறுவார். உயிரிழந்த எனது மகளுக்கு நிச்சயம் நீதி வேண்டும் என்று அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார்களை திட்டவட்டமாக மறுத்த நாயர் மருத்துவமனையின் டீன் ரமேஷ் பார்மால், மருத்துவர் பாயலின் தாயார் சாதியக்கொடுமை நடந்ததாக நிர்வாக தரப்பில் புகார் தெரிவித்ததாக கூறுவது உண்மையில்லை என்றும் இந்த விவகாரத்தில் அவர் கூறுவது போன்ற எந்த புகாரையும் இன்றைய நாள்வரை நிர்வாகம் பெறவில்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறும்போது, ராகிங்க்கு எதிரான குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. அவர்கள் 3 பேரும் தற்போது மும்பையில் இல்லை. இதுகுறித்து விசாரணை அறிக்கை விரைவில் அந்த கமிட்டி தாக்கல் செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


 

.