This Article is From Jul 27, 2019

மும்பையில் மழை வெள்ளத்திற்குள் சிக்கிய ரயில் - பயணிகள் 700 பேரை மீட்கும் பணி தீவிரம்!!

மும்பை - கொல்ஹாப்பூர் இடையே செல்லும் மகாலக்ஷ்மி விரைவு ரயில் வங்கானி அருகே நேற்றிரவு சிக்கிக் கொண்டது.

இன்று காலை முதல் வங்கானி, பத்லாப்பூர், உல்ஹாஸ்நகர் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Mumbai:

மும்பையில் மழை வெள்ளத்திற்குள் மும்பை - கொல்ஹாப்பூர் இடையே செல்லும் மகாலக்ஷ்மி விரைவு ரயில் வங்கானி அருகே நேற்றிரவு சிக்கிக் கொண்டது. அதில் இருக்கும் பயணிகள் 700 பேரைமீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. 

பயணிகள் சுமார் 900 பேரை ஏற்றிக் கொண்டு கொல்ஹாப்பூர் செல்லும் ரயில் மும்பை அருகே மழை வெள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் தானே மாவட்டத்தின் வங்கானி பகுதியில் நேற்றிரவு நடந்தது.
 


சுற்றிலும் வெள்ளம் காணப்பட்டதால் பயணிகள் தங்களது நிலைமையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களின் மூலமாக உதவி கேட்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. 

கடந்த 15 மணி நேரமாக குடிக்க தண்ணீர், உணவின்றி தவித்ததாக பயணிகள் சிலர் தெரிவித்தனர். வெளியேற முடியாத வகையில் ரயிலின் இரு பக்கமும் 5 முதல் 6 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் காணப்பட்டது. தற்போது ராணுவ ஹெலிகாப்டர்கள், படகுகளுடன் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. 

பயணிகள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. பத்லாப்பூர், உல்ஹாஸ்நகர், வங்கானி உள்ளிட்ட பகுதியில் வெள்ள பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. 

மும்பையில் விடிய விடிய பெய்த மழையால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்று காலை மட்டும் 11 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.  சில விமானங்கள் வழித்தடம் மாற்றி இயக்கப்பட்டன. 
 

.