16 தீயணைப்பு வண்டிகள் கொண்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
ஹைலைட்ஸ்
- மும்பையின் படேல் சாம்பர்ஸில் தீ விபத்து ஏற்பட்டது
- காலை 4:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது
- தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
Mumbai: மும்பையின் ஃபோர்ட் பகுதிக்கு அருகில் இருக்கும் படேல் சாம்பரஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் லெவல்- 3 ஆக இருந்த தீ விபத்து சீக்கிரமே லெவல்-4 ஆக மாறியது. இதனால், தீ கட்டுக்கடுங்காமல் பரவியது. இதையடுத்து, 16 தீயணைப்பு வண்டிகள் கொண்டு தீயணைப்பு வேலைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து இந்த தீ விப்பதை நேரில் சென்று கட்டுபடுத்திக் கொண்டிருந்த தீயணைப்புத் துறையின் முதன்மை அதிகாரி பிரபாத் ரஹங்டாலே, `தீ வேகமாக பரவினாலும் தற்போது சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.
இரு தீயணைப்பு வீரர்களுக்கு இந்த சம்பவத்தின் போது லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 16 தீயணைப்பு வண்டிகள், 150 தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரஹங்டாலே மேலும் கூறுகையில், `படேல் சாம்பரஸ் கட்டடம் கடந்த 4 ஆண்டுகளாக காலியாக இருக்கிறது. எனவே, இதன் படிக்கட்டுகள் சேதாரம் அடைந்துவிட்டது. இந்த காரணத்தால் கட்டடத்துக்கு உள்ளே சென்று தீயை அணைக்க இயலவில்லை. மும்பையின் மிக நெருக்கமான பகுதி என்பதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதால், பக்கத்து கட்டடங்களுக்கு தீ பரவும் என்று அச்சப்பட்டோம். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். தீ விபத்துக்குக் காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்று கூறியுள்ளார்.
கடந்த 10 நாட்களில் மும்பையில் நடக்கும் இரண்டாவது பெரிய தீ விபத்து இது.