Read in English
This Article is From Sep 19, 2019

Mumbai rains: மும்பையில் கனமழை எச்சரிக்கையால் ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Mumbai rains: மகாராஷ்டிராவில் மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது இந்திய வானிலை மையம்.

Advertisement
இந்தியா Edited by
Mumbai:

மும்பையில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சிரைக்க விடுத்ததை தொடர்ந்து, அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆஷிஸ் செலார் தனது ட்வீட்டர் பதவில், "கனமழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2019 செப்டம்பர் 19 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும், உள்ளூர் நிலையின் அடிப்படையில் இது போன்ற முடிவுகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களையும் அவர் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. மேலும் ராய்கட், பால்கர், கோலாப்பூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மும்பை நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் வெளியேறவும், கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் பிடியும் #மும்பைக்காரர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து கவனமாக இருங்கள். அவசர உதவிக்கு #டயல் 1916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 
 

மும்பை புறநகர் பகுதி, நவி மும்பை, தானே மற்றும் மும்பையின் வடக்கு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டி வருகிறது. மும்பையின் தெற்கு பகுதிகளில் இரவு 10.30 மணி முதல் மழை பெய்ய துவங்கியது. மும்பை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ரயில், பஸ், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. 

Advertisement

மும்பையில் இந்த ஆண்டு இதுவரை 346.76 செ.மீ. மழை பெய்து உள்ளது. மும்பையில் இதுவரை பருவமழை காலத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும் எனவும் கூறியுள்ளது. 

கடந்த ஜூலை மாத இறுதியிலும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலும் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழைக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

பல கோடி மதிப்பு சொத்துக்கள்  சேதமடைந்தன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக மகாராஷ்டிரா மாநிலம் மீண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. 

Advertisement
Advertisement