Read in English
This Article is From Jul 27, 2019

மும்பையில் கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல்! திருப்பிவிடப்பட்ட 17 விமானங்கள்!

வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளிலிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • கனமழை காரணமாக பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.
  • கடும் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் மேலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
Mumbai:

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக 17 விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. 

மேலும் கனமழை விடாமல் பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் வெள்ளப்பெருக்காக காட்சியளிக்கின்றன. இதனால், நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளன. கனமழையின் தீவிரம் இன்று பிற்பகல் அல்லது மாலைக்கு பின்னரே குறைய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்கைமெட் கணித்துள்ளது. 

வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளிலிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானங்கள் சராசரியாக 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படுகின்றன.

வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டரை மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விமான நிலையத்தை அடைய வேண்டிய நிலை உள்ளது. 

மேலும், மும்பையில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

கடந்த 48 மணி நேரத்தில் பெய்த கனமழையால், சியான், மதுங்கா, மாஹிம், அந்தேரி, மலாட் மற்றும் தஹிசார் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் காகர் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு சுவரின் ஒரு பகுதி மழை காரணமாக இடிந்து விழுந்தது, ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Advertisement

உள்ளூர் ரயில்களும் சற்று தாமதத்துடன் இயங்கி வருகின்றன. பெஸ்ட் (பிரிஹன்மும்பை மின்சார வழங்கல் மற்றும் போக்குவரத்து நிறுவனம்) ஐந்து வழித்தடங்களில் பேருந்துகளை மாற்றுப்பாதையில் இயக்கி வருகிறது. 

மும்பையில் காகர் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு சுவரின் ஒரு பகுதி மழை காரணமாக இடிந்து விழுந்தது, ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Advertisement

இது மும்பை மக்களை 2005ல் இதே ஜூலை 26ம் தேதி பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கை நினைவுப்படுத்தியதாக பலரும் தங்கள் ட்விட்டர் பதிவில் தெரிவித்து வருகின்றனர். 

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள புகைப்படங்களையும் பதிவு செய்துவருகின்றனர். 

Advertisement