மழையை எதிர்கொள்ள உஷார் நிலையில் அனைத்துத் துறைகளும் வைக்கப்பட்டுள்ளன
ஹைலைட்ஸ்
- நேற்று மும்பையில் கன மழை பெய்தது
- இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது
- கோவா, தெற்கு மகாராஷ்டிராவிலும் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது
Mumbai: மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், அனைத்துத் அரசுத் துறைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக நேற்று முழுவதும் பெய்த தொடர் மழையால் மும்பையின் முக்கிய சாலைகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த மழையால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், சில விமானங்களும் இன்று செல்லாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம், `நகரத்தில் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையின் வீச்சு அதிகரிக்கும். இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். முடிந்த வரை மக்கள் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.
இந்த கன மழையில் பாதிக்கப்பட்டு, செல்ல வீடில்லாதவர்கள் தங்குவதற்கு ஏதுவாக அனைத்து பள்ளிகளும் திறந்தே இருக்கும். எனவே, வசிப்பிடங்களில் நீர் புகுந்தாலும் அருகில் இருக்கும் பள்ளிகளில் மக்கள் தங்கிக் கொள்ளலாம். அசம்பாவிதங்பகளை சமாளிக்க கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல, தேசிய பேரிடர் குழுவும் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் நிலையில் எச்சரிக்கப்பட்டு உள்ளன.
(With inputs from PTI and ANI)