Mumbai:
கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பொழிந்து வரும் நிலையில், மிக அதிகமான மழை தொடர்ந்து பெய்யும் என்று இந்திய வானியல் மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது அத்துடன் ரயில்கள் மற்றும் போக்குவரத்து தாமதமாகியுள்ளது. தெற்கு மும்பையின் மரைன் லைன்ஸ் பகுதியில் உள்ள எம்.ஜி. சாலை அருகே மெட்ரோ சினிமாவுக்கு அருகே ஒரு மரம் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ கூறியுள்ளது.
தெற்கு மும்பை கொலாபா மற்றும் சாண்டா குரூஸ் ஆகிய இடங்களில், 90 மிமீ மற்றும் 195 மி.மீ மழைப்பொழிவு காலை 5.30 மணியளவில் பதிவு செய்யப்பட்டன. மத்திய ரயில்வேயின் கூற்றுப்படி, சீயன் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தகவல்.
மும்பை போலீசார் தெரிவித்த தகவலின்படி, JVLR பாலம், விக்ரோலி, கர், மலாட் சுரங்கப்பாதை மற்றும் ஆதேரி சுரங்கப்பாதை போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதித்துள்ளது.
மும்பை மழை மற்றும் வானிலையைப் பற்றிய நேரடித் தகவல்கள்:தனியார் வானிலை முன்னறிவிப்பு ஸ்கைமெட்டின் துணைத் தலைவர் கடந்த 21 மணி நேரத்தில் சாண்டாக்ரூஸ், 195 மிமீ மழை பெற்றுள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.
நேற்று இரவில் இருந்து பெய்த மழையால் நகரத்தில் திங்கட்கிழமை குழப்பமாக அமைந்தது. மும்பையில் உள்ள உள்ளூர் ரயில்களும் கால அட்டவணைக்கு பின் இயங்கிக் கொண்டிருக்கின்றன மற்றும் போக்குவரத்தும் நேற்று இரவு மற்றும் காலை மழைக்கு பின்னர் பாதிக்கப்பட்டது. மும்பை மற்றும் தானே பகுதிகளில் மூன்று பேர் இறந்துள்ளனர். நகரத்தில் உள்ள பல பள்ளத்தாக்குகள் நீரில் மூழ்கிவிட்டன.
மும்பையில் உள்ள லாயிட்ஸ் எஸ்டேட் வளாகத்தில் குறைந்தபட்சம் 12 வாகனங்கள் இன்று காலை சிதைத்திருக்கும்.தொடர்ந்து மழைபெய்ததால் மும்பையின் பல பகுதிகள் மாட்டிக் கொண்டன. வாடாலாவில் உள்ள ஆண்டோப் ஹில்லில் இருந்து வந்த வியத்தகு காட்சிகள் பல கார்கள் குப்பையில் சிக்கியதைக் காட்டியது.
சாந்த்ரூஸ் வானிலை மையத்தின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 231.4 மி.மீ மழை பதிவாயுள்ளது. தொடர்ந்து அதிக மழைப்பொழிவு முதல் மிகவும் கடுமையான மழை பெய்யும் என ஐஎம்டி மும்பை இயக்குனர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
பல மும்பை பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுனாபட்டி, வாடாலா, ததர், மலாத், குர்லா, காம்தேவி மற்றும் சாந்த்ரூஸ்-செம்புர் இணைப்பு சாலை ஆகியவை அனைத்தும் வெள்ளத்தாஅல் பாதிப்பு அடைந்துள்ளன.
கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளின் (EEH-WEH) சில பகுதிகளில் நீரில்மூழ்கியதால், மும்பையில் காலை போக்குவரத்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என IANS தகவல்கள் கூறுகின்றன.
தானே பால்கார் மற்றும் ராய்காட் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய மற்றும் தடிமனான சாலைகள் மற்றும் நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகள் நீரால் முழ்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
மிலன் சுரங்கப்பாதை, சாண்டாக்ரூஸ், கோரேகாங்க் மற்றும் பாந்த்ராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுள்ளது.
மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவித்த பகுதிகள்:- சாண்டாக்ரூஸ்ஸில் மிலன் சுரங்கப்பாதை
- கோரேகாங்கில் உள்ள சித்தார்த் மருத்துவமனை
- ஃபில்டர் பாடா மற்றும் மோராஜி நகர், பவாய் செம்பூர்
- ஆந்தேரியில் எஸ்.வி. சாலை
- பாந்த்ரா தேசிய கல்லூரி
- சீயோன்