Read in English
This Article is From Jun 14, 2019

தண்டவாளத்தில் பாறாங்கல் விழுந்ததை தெரிவித்த சிசிடிவி கேமரா! ரயில் விபத்து தவிர்ப்பு!!

சிசிடிவி கேமரா ஆப்பரேட்டரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

Advertisement
இந்தியா Edited by

2 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் ரயில் சென்றது.

Mumbai:

பாறாங்கல் தண்டவாளத்தில் விழுந்ததை சிசிடிவி கேமரா தெரிவித்ததால் பெரும் ரயில் விபத்து ஒன்று மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட்டுள்ளது.

பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் பாறைகள் விழ வாய்ப்புள்ளதால் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் மும்பை – புனே இடையே லோனவாலா ரயில் நிலையம் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி அலெர்ட்டை ஏற்படுத்தியது.

மலைப்பகுதியான அங்கு பாறை ஒன்று சரமாரியாக விழுந்து நொருங்கி தண்டவாளத்தை நிரப்பியது. இதனைப் பார்த்த சிசிடிவி ஆப்பரேட்டர் ரயில்வே அதிகாரிகளை அலெர்ட் செய்தார். இதையடுத்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பாறைகள் அகற்றப்பட்டன.

எச்சரிக்கை முன்கூட்டியே விடக்கப்பட்டதால் மும்பை – கொல்ஹாப்பூர் ரயில் வழியிலேயே 2 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisement

தண்டவாளத்தில் விழுந்த பாறை 2.3 மீட்டர் நீளமும், 1.6 மீட்டர் உயரும், 2.2 மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. இது பெரும் விபத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement