Mumbai weather: நகரில் கடுமையான மழை பெய்ய வாய்ப்பு
Mumbai: மும்பையில் இரண்டு நாட்கள் மிதமான மழைக்குப்பிறகு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ‘கடுமையான கனமழை' இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம கணித்துள்ளது.
மும்பை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் ஜெனரல் கே.எஸ். ஹோசலிகர் “ குறைந்த தாழ்வு அழுத்தம் வளர்ச்சி அடைந்துள்ளதால், மும்பைக்கு கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.
“மேற்கு கடற்கரை உட்பட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன” என்று அவர் கூறினார். புறநகர் பகுதிகளில் உள்ள ஐஎம்டியின் சாண்டாக்ரூஸ் வானிலை மையம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியோடு முடிவடைந்த கடைசி 24 மணி நேரத்தில் 43.4 மிமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)