This Article is From Jun 12, 2020

கொரோனா பாதிப்பு அறிக்கை தாமதமானதால் தனியார் ஆய்வகத்திற்கு தடை விதித்த மும்பை மாநகராட்சி

தாமதமாக வரும் அறிக்கையில் தொடர்பு தடமறிதலில் தாமதம் ஏற்படுகிறது. இது  தாமதமான சிகிச்சைக்கு வழிவகுக்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தாமதமான அறிக்கைகளின் சதவீதம் மிகக் குறைவு என்று ஆய்வகம் கூறியது

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நேற்று இரவு தரவுகளின்படி 2.93 லட்சமாக உயர்ந்திருக்கையில் தற்போது தேசிய வர்த்தக தலைநகரான மும்பை அதிகம்  தொற்று பாதித்த நகரமாக உள்ளது. ஏறத்தாழ 54 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்நகரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆய்வு பரிசோதனை அறிக்கையை தாமதமாக தருவதாக கூறி தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு அடுத்த நான்கு வாரங்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தனியார் ஆய்வகங்களில் இந்த ஆய்வகமும் அதிக அளவில் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தாமதமாக வரும் அறிக்கையில் தொடர்பு தடமறிதலில் தாமதம் ஏற்படுகிறது. இது  தாமதமான சிகிச்சைக்கு வழிவகுக்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட தனியார் ஆய்வகத்தின் ஊழியர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தாமதமாகிறது என தனியார் ஆய்வகம் தனது தவறினை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அறிக்கை தாமதமாக வருவதென்பது மிகக் குறைந்த அளவுதான் என்றும் கூறியுள்ளது. அதேபோல  தைரோகேர் என்கிற தனியார் ஆய்வகமும் ஆய்வு மேற்கொள்ள தடை விதித்திருந்தது. தொற்று ஏற்பட்டவர்களை தவறாக அடையாளப்படுத்தியதற்காக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆய்வகத்தின் மீதான தடை நீக்கப்பட்டு ஆய்வினை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதே போல டெல்லிக்கு அருகில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவின் தொழில்துறை டவுன்ஷிப்பில் இயங்கும் மூன்று தனியார் ஆய்வகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம், இந்த ஆய்வகங்கள் தவறான அறிக்கையை வெளியிட்டதன் காரணமாக சுமார் 35 பேர் கொரோனா தனிமைப்படுத்தலில் மூன்று நாட்கள் கழித்தனர். மக்களிடம் தொற்று உறுதி செய்வதில் தொடர்ந்து முரண்கள் ஏற்பட்டுவருகின்றன.

.