This Article is From Jun 30, 2020

மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு!

கொலாபாவில் உள்ள தாஜ் மஹால் பேலஸ் மற்றும் பந்தராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் உள்ளிட்ட இரண்டு ஹோட்டல்களின் தொலைபேசி எண்களுக்கும் நேற்றிரவு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. 

மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு!

Mumbai:

தெற்கு மும்பையில் உள்ள 2 தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் 26/11 தாக்குதல் போல் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்ததாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இரண்டு ஹோட்டல்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கொலாபாவில் உள்ள தாஜ் மஹால் பேலஸ் மற்றும் பந்தராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் உள்ளிட்ட இரண்டு ஹோட்டல்களின் தொலைபேசி எண்களுக்கும் நேற்றிரவு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. 

இரண்டு ஹோட்டல்களிலும், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன, தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

2008ல் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது, மும்பையில் குறிவைக்கப்பட்ட இடங்களில் கொலாபாவில் உள்ள தாஜ்மஹால் பேலஸூம் ஒன்றாகும். தாஜ்மஹால் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையம் மற்றும் லியோபோல்ட் க்ஃபே உள்ளிட்ட சில இடங்களில் 10 ஆயுதமேந்திய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த மூன்று நாள் தாக்குதலில் குறைந்தது 174 பேர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

கடந்த நவம்பர் 2008ல் நடந்த தாக்குதலில் பல போலீசாரும், தேசிய பாதுகாப்புக் காவலர் கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனும் உயிரிழந்தனர். 
 

.