This Article is From Apr 06, 2020

தனியார் மருத்துவமனையில் 26 செவிலியர்கள், 3 மருத்துவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்!

இந்தியாவில் பெரிதும் பாதிக்கப்பட்ட நகரங்களில் மகாராஷ்டிராவின் மும்பை பகுதி உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 745 பேரில் 458 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Coronavirus, Mumbai: தனியார் மருத்துவமனையை சேர்ந்த 26 செவிலியர்கள், 3 மருத்துவர்களுக்கு கொரோனா

ஹைலைட்ஸ்

  • தனியார் மருத்துவமனையை சேர்ந்த 26 செவிலியர்கள், 3 மருத்துவர்களுக்கு கொரோனா
  • அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
  • தாராவியில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Mumbai:

மும்பையில் தனியார் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள் 26 பேர் மற்றும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையின் வோக்ஹார்ட் மருத்துவமனையின் உள்ளே இருப்பவர்கள் வெளியேறவும், வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இரண்டு முறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த 2 சோதனைகளிலும் பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது வரை 270 நோயாளிகளுக்கும், செவிலியர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவும், வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவும் முடக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கேன்டீன் நோயாளிகளுக்கும், நர்ஸூகளுக்கும் உணவளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா பரவலை கட்டுரைத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், தொற்று பாதிப்புக்கு உள்ளான பகுதிகளிலிருந்து நான்கு வாரங்களுக்கு யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்று, மத்திய அரசின் சுகாதார துறை அறிக்கை குறிப்பிடுகின்றது. மேலும், பாதிக்கப்பட்ட நபரைச் சார்ந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு முற்றிலுமாக தனிமைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது

igg79gno

மும்பை வோக்ஹார்ட் மருத்துவமனையில் உள்ள 270 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்தியாவில் பெரிதும் பாதிக்கப்பட்ட நகரங்களில் மகாராஷ்டிராவின் மும்பை பகுதி உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 745 பேரில் 458 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதுவரை அங்கு பதிவாகியுள்ள 45 உயிரிழப்புகளில் 30 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 

ஆசியாவின் மகிப்பெரிய சேரிப் பகுதியை கொண்டதாகவும் மும்பை விளங்குகிறது. அங்கு தாராவியில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 693 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அண்மையில் வந்த இந்த தகவல்கள் அறிக்கைகளை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000த்தை கடந்தது. தொடர்ந்து, 4வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் மேல் அதிகரித்து வருகிறது. 

.