கடன் பிரச்னையால் 25 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.
Thane: மகாராஷ்டிராவில் கடன் பிரச்னை காரணமாக 25 வயது இடம்பெண் ஒருவர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார். கொலை காரனை பிடிப்பதற்கு சிக்கன் இறகு உதவியது.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் உடல் முழுவதும் எரிக்கப்பட்டிருந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் கொல்லப்பட்டவரின் பேக்கில் இருந்து சிக்கன் இறகு ஒன்றும், தாயத்து ஒன்றும் எடுக்கப்பட்டது. தாயத்தில் பெங்காலி மொழியில் எழுத்துக்கள் இருந்தன.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மேற்கு வங்கத்தவர் இருக்கும் பகுதியில் உள்ள சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிக்கன் கடை உரிமையாளர் ஒருவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்திய அவர்கள், தலைமறைவாக இருந்த சிக்கன் கடை உரிமையாளரை நேற்று கைது செய்தனர். அவரை விசாரித்ததில் கொலையை ஒப்புக் கொண்டார். ரூ. 2.50 லட்சம் கடன் அளித்திருந்ததாகவும், அதனை திருப்பி தராததால் இளம்பெண்ணை கொலை செய்ததாகவும் அவர் கூறினார்.
சிக்கன் இறகால் கொலைகாரன் ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.