This Article is From Oct 16, 2019

குடும்படுத்துடன் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொடூரமாக கொலை: குற்றவாளி கைது.. திடுக் பின்னணி!

கொல்கத்தாவில் கடந்த வாரம், பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

குடும்படுத்துடன் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொடூரமாக கொலை: குற்றவாளி கைது.. திடுக் பின்னணி!

பணத் தகராறே இந்த கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Kolkata:

மேற்குவங்கம் மாநிலம், முர்ஷிதாபாத்தில், பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி, 6 வயது குழந்தையுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு அரசியல் பின்னணி இல்லை என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். 

பந்து பிரகாஷ் பால் (35), இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பியூட்டி (30), மகன் ஆர்யா (6), இவர்கள் மூவரும் வீட்டிலே ரத்தம் தெறிக்க சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்த அந்த பெண் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து 210 கி.மீ தொலைவில் உள்ள ஜியாஜாங்கில் விஜயதசமி மற்றும் தசரா கொண்டாடப்பட்ட அதே நாளில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த கொலை விவகாரம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால், அரசியல் விவகாரமாக விஷ்வரூபம் எடுத்தது. கொலை செய்யப்பட்ட பந்து பால், ஆர்எஸ்எஸ் நிர்வாகி என்றும் அவர் சமீபத்தில் தான் அதில் இணைந்தார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வீடியோவாகவும், புகைப்படமாகவும், சமூகவலைதளங்களில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் பாஜகவினரால் தீவிரமாக பரப்பப்பட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்திதொடர்பாளர் சம்பித் பத்ரா தனது ட்வீட்டர் பதவில், அந்த வீடியோவை பகிர்ந்து மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது இது எனது மனசாட்சியை உலுக்கியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோல பல பாஜக தலைவர்களும் அந்த வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக போலீசார் உத்பால் பெகாரா என்ற முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கு அரசியல் பின்னணி இல்லை என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, உத்பால் பெகாரா, பந்து பிரகாஷின் தொழில்முறை பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பந்து பிரகாஷிடம் இரண்டு லைப் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு உத்பால் பணம் கொடுத்துள்ளார். 

இதில், முதல் பாலிசிக்கான பணத்தை செலுத்திய ரசீதை உத்பாலிடம் பிரகாஷ் கொடுத்துள்ளார். எனினும், இரண்டாவடுத இன்சூரன்ஸ் பாலிசிக்கான ரசீதை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக பிராகஷிடம் உத்பால் பலமுறை ரீசிதை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். எனினும், பிரகாஷ் இதனை பெரிதாக பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த உத்பால், பிரகாஷை குடும்பத்துடன் கொலை செய்ய முடிவு செய்து இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார். எனினும், இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சனையாக பெரும் விவகாரம் பார்க்கப்பட்டது. எனினும், கொலையான பிரகாஷின் குடும்பத்தினர் அரசியல் காரணம் இருக்காது என்று உறுதியாக தெரிவித்து வந்தனர். 

இதேபோல், திரிணாமுல் காங்கிரசும், உயிரிழப்பை வைத்து பாஜக அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சித்து வந்தது.

.