ஷாகுத் அலி (68) தாக்குதலுக்கு உள்ளானதோடு பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
ஹைலைட்ஸ்
- ஷாகுத் அலி (68) என்பவரை அடித்து பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தினர்
- மாட்டுகறி விற்க உனக்கு உரிமம் உள்ளதா என்று கேட்டு மிரட்டியுள்ளனர்
- உன் பெயர் தேசிய குடியுரிமை பதிவேட்டில் உள்ளதா என்று கேட்டு மிரட்டியுள்ளனர
Biswanath, Assam: அஸ்ஸாம் மாநிலத்தில் பிஸ்வானாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மாட்டுக் கறி விற்றதற்காக முஸ்லீம் மனிதர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டு அவரை பன்றிக் கறி தின்ற வைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது. ஐந்து பேர் முன்பு முட்டிக்கால் போடப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் தன்னை விட்டு விடுமாறு கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
ஷாகுத் அலி (68) தாக்குதலுக்கு உள்ளானதோடு பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் செயலை உள்ளூர் நபர்களே செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். NDTV-யால் வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. கூட்டமாக ஒரு மனிதனை தாக்குகிற காட்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது.
மாவட்ட காவல்துறையினரிடம் கேட்ட போது, தனித்தனியாக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளனர். அதில் ஒன்று சவுகத் அலியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. போலீஸார் விசாரணை தொடங்கி வீடியோவில் உள்ள நபர்களைத் தேடி வருகின்றனர்.
ஷாகுத் அலியை மிரட்டிய கும்பல் அவரை மாட்டிறைச்சி விற்க உரிமம் பெற்றுள்ளாரா என்று கேட்டு மிரட்டியுள்ளது. மேலும், பங்களாதேஷில் இருந்தாரா, இல்லையா என்றும் கேட்டு மிரட்டியுள்ளனர்.
“நீ பங்களாதேஷத்தை சேர்ந்தவனா…? இந்திய குடியுரிமைக்கான பட்டியலில் உன் பெயர் உள்ளதா…? ” என்று கேட்டி மிரட்டியுள்ளனர். அசாமில் சட்ட விரோத குடிமக்களை களைவதற்கு குடிமக்களின் தேசியப் பதிவை அமல் படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி வரைவில், 40 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ள பட்டியலை வெளியிட்டது. அதில் 2,29,91,384 விண்ணப்பதாரர்கள் அந்தப் பட்டியலில் இல்லை பி.ஜே.பி தனது தேர்தல் அறிக்கையில் “ குடிமக்களின் தேசிய பதிவு பிரச்னைகள் விரைந்து முடிக்கப்படும்” என்று கூறியுள்ளது.
பிஸ்வானாத் மாவட்டம் தேஜ்பூர் மக்களவை தொகுதிக்குள் வருகிறது. ஏப்ரல் 11 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.