This Article is From Jun 09, 2020

லடாக் எல்லையில் இந்தியா – சீனா படைகள் பரஸ்பரம் திரும்பிச் செல்வதாக தகவல்!!

20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500கி.மீ எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை.

லடாக் எல்லையில் இந்தியா – சீனா படைகள் பரஸ்பரம் திரும்பிச் செல்வதாக தகவல்!!

இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது.

ஹைலைட்ஸ்

  • லடாக்கின் கிழக்குப் பகுதியில் சீனா படையை குவித்ததால் பதற்றம்
  • 2 வாரங்களாக எல்லையில் பதற்றம் அதிகம் காணப்பட்டது
  • பேச்சுவார்த்தை முடிவில் படைகள் திரும்பப் பெறப்படுவதாக தகவல்
New Delhi:

லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இந்தியா – சீனா ராணுவ படைகள் பரஸ்பரம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நாளை இரு தரப்புக்கும்இடையே இரண்டாவது கட்டமாக ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த சூழலில் இரு தரப்பினரும் பரஸ்பரம் படைகளை திரும்பப் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாங்காங் சோ பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் சீன படைகள் திரும்பப் பெற்று வரப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்படி சுமார் 2 முதல் 3 கிலோ மீட்டர் தொலைவு வரையில் சீன ராணுவத்தினர் பின்வாங்கிச் செல்வதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஏற்கனவே இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, தூதரக ரீதியிலும், பேச்சுவார்த்தை மூலமாகவும் எல்லை பிரச்னையை சரி செய்து கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த சூழலில் இதனை விரைவில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இந்தியா - சீனா இடையே 1962-ம் ஆண்டில் போர் நடைபெற்றது.  கடந்த 2017-ல் கிழக்கு இமாலய பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் இரு தரப்பு படைகளுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இரு  நாட்டு படைகளும் 3 மாதங்கள் முற்றுகையிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500கி.மீ எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை.

இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில் ராணுவ பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாட்டு படைகளும் பரஸ்பரம் பின்வாங்கிச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.