கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து குறைந்தபட்சம் ஒரு கி.மீ படைகளை திரும்ப பெற்ற சீனா!
New Delhi: லடாக்கில் பதட்டமான கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா தனது படைகளை குறைந்தது ஒரு கி.மீ தூரத்திற்கு திரும்ப பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதியில்தான் கடந்த ஜூன் 15ம் தேதியன்று இந்திய - சீனா வீரர்களிடையே, ஏற்பட்ட பயங்கர மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இந்திய வீரர்களும், படையை திரும்ப பெற்றதாகவும், இரு தரப்பு படையினருக்கும் இடையே மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன வீரர்கள் கால்வான் நதி வளைவில் இருந்து திரும்ப தொடங்கியுள்ளதாகவும், அப்பகுதியிலிருந்து கட்டமைப்புகளை அகற்றியுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில், கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து மட்டும் சீன படையினர் திரும்பி சென்றதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீடித்த நிலையில் படையை திரும்ப பெற்றுள்ளார்களா என்பதை அறிய நாம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
இந்திய வீரர்கள் பின்வாங்கும்போது, எந்தவொரு எல்லை உரிமைகோரலையும் கைவிடாமல் இது மேற்கொள்ளப்படுகிறது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, இரு படைகளும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பரஸ்பர அடிப்படையில் பிரியும் நோக்கத்துடன், படைகளை திரும்பெறும் செயல்முறை நடைபெறுவது நம்பிக்கையை உருவாக்குகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, லடாக் முன்னோக்கிய பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென ஆய்வு மேற்கொண்ட மூன்று நாட்களில் படைகளை திரும்ப பெறுவதாக தகவல்கள் வெளிவருகிறது. இந்த ஆய்வின் போது, ஆயிரக்கணக்கான வீரர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, எல்லை விரிவாக்கத்தின் வயது முடிந்துவிட்டது. இது நம் நாட்டின் வளர்ச்சிக்கான நேரம். எல்லை விரிவாக்கம் சக்தி இழந்துவிட்டன அல்லது அதற்காகப் போர் தொடுத்தவர்கள் திரும்பிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர் என்றார்.
கடந்த வாரம், இந்திய மற்றும் சீனப் படைகளின் தளபதிகள் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தனர். இந்த லெப்டினன்ட்-ஜெனரல் மட்ட பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் - எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதட்டத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பான சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பல சீன ஊடுருவல்களுக்கும், கனரக ஆயுதங்கள் மற்றும் சீன கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான சான்றாகும். கால்வான் பள்ளத்தாக்கில் 423 மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக அந்த படங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
பிளானட் லேப்ஸிலிருந்து என்டிடிவிக்கு கிடைத்த படங்களில் லடாக்கின் பாங்காங் ஏரி பிராந்தியத்தில் சீனப் படைகளின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைப்பைக் காட்டின, அங்கு மே மாதத்தில் வன்முறை மோதல்களுக்குப் பின்னர் இந்திய வீரர்கள் ரோந்துப் பணியில் இருந்து நிறுத்தப்படுகிறார்கள், இதில் பல இந்திய வீரர்கள் காயமடைந்ததாக நம்பப்படுகிறது.