This Article is From Sep 30, 2018

ரஜினியுடன் நடிப்பதால் நடிப்பு வாழ்க்கை முழுமை பெறுகிறது – த்ரிஷா ஃபீலிங்

ரஜினியுடன் நடிப்பதுபற்றி த்ரிஷா அளித்த பேட்டியில், “ எப்ப நீங்க ரஜினியுடன் நடிப்பீங்கன்னு ரொம்ப பேரு கேட்டுட்டே இருந்தாங்க

Advertisement
Entertainment Posted by

ரஜினியின் “பேட்ட” படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை த்ரிஷா. கடந்த சில மாதங்களாக பேட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் வாரணாசியில் நாளை நடைபெறவுள்ள படப்பிடிப்பின்போது த்ரிஷா அதில் பங்கேற்கிறார். ரஜினியுடன் நடிப்பதுபற்றி த்ரிஷா அளித்த பேட்டியில், “ எப்ப நீங்க ரஜினியுடன் நடிப்பீங்கன்னு ரொம்ப பேரு கேட்டுட்டே இருந்தாங்க. அந்த கேள்வி உண்மையிலேயே எனக்கு மனசுல உறுத்தலாகவே இருந்துச்சு. இப்ப ரஜினி சாரோட நடிக்குற நேரம் வந்திடுச்சு. பேட்ட ஷூட்டிங் செட்ல அக்டோபர் 1-ம்தேதி (நாளை) ஜாயின் பன்றேன். ஒரு மாதத்திற்கு நான் ஷூட்டிங்ல இருப்பேன். ரஜினி சாரோட நடிக்கிறதால என்னோட நடிகை கேரியர் முழுமை பெற்றதா ஃபீல் பண்றேன்” என்றார்.

விஜய் சேதுபதியுடன் த்ரிஷா நடித்திருக்கும் ’96‘ திரைப்படம் 4-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் த்ரிஷா கூறியுள்ளார்.

Advertisement