This Article is From Nov 15, 2018

எனது அரசாங்கம் அனைத்து மதத்தினருக்குமானது: மம்தா பானர்ஜி

யுனெஸ்கோ உலக தத்துவ தினத்தை 2002ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

எனது அரசாங்கம் அனைத்து மதத்தினருக்குமானது: மம்தா பானர்ஜி

சகிப்புத்தன்மையே, நாகரிகம் முன்னேற்றமடைவதற்கான திறவு கோல் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

Kolkata:

மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பதிவில், தனது அரசாங்கம் அனைத்து மதங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் மரியாதை அளிப்பதாக கூறியுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உலக தத்துவ தினமான இன்று, தனது டிவிட்டரில், நாகரிகம் முன்னேற்றமடைவதற்கான கருவி சகிப்புத்தன்மையே என்று பதிவிட்டுள்ளார்.

உலக தத்துவ தினமான இன்று கலாச்சாரங்கள், தனிமனிதர்கள் மற்றும் மனித எண்ணங்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். அனைத்து மதங்களுக்கும் மரியாதை செலுத்துகிறோம்.

சகிப்புத்தன்மையே, நாகரிகம் முன்னேற்றமடைவதற்கான திறவு கோல். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

.