சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Korba: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சத்தீஸ்கரில் இன்று பேசியதாவது, எனது அரசியல் என்பது ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காகவே என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல், ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காகவே நான் அரசியல் செய்கிறேன். அவர்களின் பணத்தில் நான் 10-15 தொழிலதிபர்களை பாதுகாக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், மாநிலத்தில் மக்கள் ஆட்சியை நிறுவும் காங்கிரஸ், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
நீர், காடுகள், சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த செல்வந்த நாட்டில், பாஜகவின் கொள்கைகளால் மக்கள் மட்டும் ஏழைகளாக உள்ளனர் என்றார்.